Director Jason Sanjay: ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோ த்ருவ் விக்ரம் இல்லை.. அவர் கணக்கே வேற!

சென்னை: நடிகர் விஜய்யின் The greatest of all time படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. விரைவில் படக்குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெளியானது. இதனிடையே அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

லைகா பேனரில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அவர் தன்னுடைய படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார். படத்தின் அறிவிப்பு வெளியாகி 7 மாதங்களை கடந்த நிலையில் படத்தின் ஹீரோ குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் ஆகியோர் படத்தின் நாயகனாக இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இருவருமே டேட்ஸ் இல்லை என்று கைவிரித்து விட்டனர். இதனிடையே நடிகர் த்ருவ் விக்ரம் இந்தப் படத்தில் ஹீரோவாக உள்ளதாக கூறப்பட்டது.

It seems that Dhruv vikram is not joined with Jason sanjay s movie because of next to next commitments

நடிகர் விஜய்: நடிகர் விஜய் -இயக்குநர் வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகிவரும் படம் The greatest of all time. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் பூஜையுடன் துவங்கப்பட்டு தொடர்ந்து சென்னை, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்துள்ளது. தற்போது சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜேசன் சஞ்சய்: இதனிடையே விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா தயாரிக்கவுள்ள படத்திற்கான வேலைகள், அறிவிப்புடனேயே நின்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஜேசன் சஞ்சய் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. படத்தின் அறிவிப்பை தொடர்ந்து விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் ஆகியோர் இந்தப் படத்தின் ஹீரோவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

த்ருவ் விக்ரம் ஹீரோ?: இந்நிலையில் இவர்கள் இருவருமே டேட்ஸ் இல்லை என்று கைவிரித்து விட்டதாகவும் இதையடுத்து இந்தப் படத்தில் த்ருவ் விக்ரம் ஹீரோவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவரும் இல்லை. நடிகர் சிவகார்த்திகேயன்தான் ஜேசன் சஞ்சய் படத்தின் ஹீரோ என்றும் ஒருபுறம் தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆனால் அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளதால் இந்தத் தகவலும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் த்ருவ் விக்ரம் ஜேசன் சஞ்சய் படத்தில் இணையவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க த்ருவ் விக்ரம் கமிட்டாகியுள்ளார்.

டாடா இயக்குநருடன் த்ருவ் விக்ரம் கூட்டணி: இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் பயோ பிக்காக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் இயக்குநர் பா ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இதனிடையே அடுத்ததாக லைகா தயாரிப்பில் டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் த்ருவ் விக்ரம் ஹீரோவாக இணையவுள்ளதாகவும் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவரும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் இணையமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் யார்தான் ஹீரோவாக நடிப்பார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X