ஏகே62 படத்தில் அஜித் கேரக்டர் என்ன தெரியுமா.. மீண்டும் விஜய்யுடன் மோதல்?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது துணிவு படம்.

துணிவு படத்தின் ட்ரெயிலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு அஜித் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது.

வாரிசு மற்றும் துணிவு என விஜய் மற்றும் அஜித்தின் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவதும் படங்களுக்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் துணிவு படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு படம் ஒரே நாளில் ரிலீசாகவுள்ளது.

துணிவு -வாரிசு படங்கள் மோதல்

துணிவு -வாரிசு படங்கள் மோதல்

ஜில்லா மற்றும் விஸ்வாசம் படங்களை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ரிலீசாவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் துணிவு படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள நிலையில், வாரிசு படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த இரு படங்களில் எந்தப் படம் ரசிகர்களை கவரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 சமமான திரையரங்குகள்

சமமான திரையரங்குகள்

இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகவுள்ள நிலையில், இரு படங்களுக்கும் சமமான திரையரங்குகளை வழங்க விநியோகஸ்தர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு படங்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த படத்திற்கு திரையரங்கு எண்ணிக்கை கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் ஏகே62 படம்

அஜித்தின் ஏகே62 படம்

துணிவு படத்தை தொடர்ந்து தனது ஏகே62 படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அஜித். இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். படத்தின் சூட்டிங் துணிவு ரிலீசை தொடர்ந்து ஜனவரி 17ம் தேதி துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

டானாக களமிறங்கும் அஜித்?

டானாக களமிறங்கும் அஜித்?

இந்தப் படத்தில் அஜித் டானாக நடிக்கவுள்ளதாகவும், அதற்காக மும்பைக்கு முதல்கட்ட படப்பிடிப்பையொட்டி படக்குழு விரைவில் செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எப்போதுமே இயல்பான லைட்டான கதைக்களங்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவர் டான் சப்ஜெக்டை கையில் எடுப்பாரா என்பது குறித்து விரைவில் அவர் அப்டேட் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

டான் கேரக்டரில் விஜய்

டான் கேரக்டரில் விஜய்

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங் துவங்கியுள்ள விஜய்யின் தளபதி 67 படத்தின் கதைக்களமும் டான் சப்ஜெக்ட் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வயதான கேங்ஸ்டராக நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனிடையே அஜித்தின் அடுத்தப்படமும் டான் சப்ஜெக்டாக உருவாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மோதலில் விஜய் -அஜித் படங்கள்?

மீண்டும் மோதலில் விஜய் -அஜித் படங்கள்?

தற்போது அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர்களின் அடுத்தப் படங்கள் டான் சப்ஜெக்டில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு படங்களும் தீபாவளியை மையமாக கொண்டு ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரின் படங்களும் மீண்டும் தீபாவளியையொட்டி மோதலில் ஈடுபடுமா என்பதும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X