Anirudh: லியோ படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகம்.. சம்பளத்தை டபுளாக்கிய அனிருத்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது.

இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கு இந்த வெற்றியில் மிகப்பெரிய பங்கு உள்ளது. படத்தில் பாடல்களையும் பிஜிஎம்மையும் அவர் தெறிக்க விட்டுள்ளார்.

It seems to be Music composer Anirudh increased his salary After success of Leo movie

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய அனிருத்: நடிகர் விஜய்யின் லியோ படம் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளிலேயே படம் 148 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளது. கடந்த இரு தினங்களில் படத்தின் வசூல் 200 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து வாரயிறுதி தினங்கள் மற்றும் விடுமுறை கொண்டாட்டங்களை அடுத்து படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம்மில் தெறிக்க விட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் பாடல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அடுத்ததாக தலைவர் 171 மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்களுக்கும் இவர்தான் இசை.

லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளையொட்டியே வெளியானது. இந்த முதல் பாடலை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். மேலும் யூடியூபிலும் இந்தப் பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்து மெலடி உள்ளிட்ட பாடல்களிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்துள்ளார். மேலும் படத்தின் பிஜிஎம்மிலும் அதிரடி சரவெடியாக செயல்பட்டுள்ளார்.

ஜெயிலர், ஜவான் படங்களை தொடர்ந்து தற்போது விஜய்யின் லியோ படமும் அனிருத் இசையில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது. இதையடுத்து அனிருத் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளார். இதுவரை ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிவந்த அனிருத், லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு படத்திற்கு இசையமைக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

It seems to be Music composer Anirudh increased his salary After success of Leo movie

முன்னதாக ஜெயிலர் படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் இசை கோர்ப்பிற்கு முன்னதாக ஜெயிலர் படத்தை பார்த்தபோது அது சராசரியான படமாகவே தனக்கு பட்டதாகவும் ஆனால், படத்தில் இசை இணைந்தவுடன் படம் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல ஜவான், லியோ படங்களிலும் அனிருத்தின் இசை மிகப்பெரிய வலிமையை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X