சந்தானத்தின் சர்வர் சுந்தரம் எடுத்து 8 வருடங்கள் ஆகுது.. கொந்தளித்த இயக்குநர்.. கடைசியில் செம ட்விஸ்ட்!
சென்னை: காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த சந்தானம் இப்போது ஹீரோவாக நடித்துவருகிறார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் விடாமல் கதாநாயகனகா நடிக்கிறார். அவர் சுமார் எட்டு வருடங்களுக்கு நடித்த படம்தான் சர்வர் சுந்தரம். ஆனால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அதன் இயக்குநர் ஆனந்த் பால்கியின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியிருக்கிறது.
சின்னத்திரையில் இருந்த சந்தானத்தை சிம்பு திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் தொடர்ச்சியாக காமெடி ரோல்களில் நடித்து அசத்தினார். ஒருகட்டத்தில் சந்தானம் இல்லாமல் எந்த சினிமாவும் இல்லை என்ற நிலைமை உருவானது. வடிவேலுவின் கால்ஷீட்டுக்கு எப்படி ரஜினி காதிருந்தாரோ; அதேபோல் சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக பல ஹீரோக்கள் காத்திருந்தார்கள்.

சந்தானமே துணை: அவர்களுக்கும் சந்தானம் துணையாகவே இருந்தார். ஆர்யா, விஷால், உதயநிதி உள்ளிட்டோர் நடித்த பல படங்கள் சந்தானம் காமெடி இல்லாமல் போயிருந்தால்; இந்நேரம் தடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும் என்றுதான் பலரும் சொல்வார்கள். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைகூட உதயநிதியை சினிமா ரீதியாக விமர்சிக்கும்போது; சந்தானத்தை இழுத்துக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ சந்தானம்: தொடர்ச்சியாக படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாகும் ஆசை வந்தது. அவருக்கு பின்னர் சினிமாவுக்கு சின்னத்திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாகிவிட்டதால்; போட்டிக்கு தானும் ஹீரோவாக களமிறங்கினார் என்றும் ஒரு பேச்சு காலங்காலமாக உண்டு. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக சந்தானம் எதையும் சொல்லவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி எஸ்கேவை சந்தானத்துக்கு அறவே பிடிக்காது என்றும் ஒருதரப்பினர் தொடர்ந்து கொளுத்தி போடுகிறார்கள்.
சர்வர் சுந்தரம்: சந்தானம் ஹீரோவாக பல படங்களில் நடித்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட்டடித்திருக்கின்றன. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த படம் சர்வர் சுந்தரம். அந்தப் படத்தை ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆனால் இன்னமும் படம் ரிலீஸாகவில்லை; இனி எப்போது அந்தப் படம் ரிலீஸாகும் என்றும் தெரியவில்லை. இந்நிலையில் ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆனந்த் பால்கி வீடியோ: அந்த வீடியோவில் அவர், "சர்வர் சுந்தரம் திரைப்படம் எடுத்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு இயக்குநராக எனக்கு எவ்வளவு வலி இருக்கும்.100 பேர் இந்தப் படத்தை பார்த்தார்கள் என்றால் 99 பேர் நன்றாக இருக்கிறது என சொல்லியிருக்கிறார்கள். அது இன்னமும் வலிக்கிறது. பல ஆர்ட்டிஸ்ட்டுகள், டெக்னீஷியன்கள் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறார்கள். கருப்பு தாமதமாகி ரிலீஸ் ஆன பிறகு ஆர்ஜே பாலாஜியின் ரியாக்ஷனை பார்த்தேன். அவர் மாதிரி நிறைய இயக்குநர்கள் உள்ளுக்குள் கத்திக்கொண்டு இருக்கிறோம்" என்றார் ஆக்ரோஷமாக.
செம ட்விஸ்ட்: ஆனால் அந்த வீடியோவிலேயே இதையெல்லாம் பேசி முடித்துவிட்டு, 'இப்படித்தான் எனக்கு ஏதோ ஒரு கோபம் வந்தால் அப்படியே கத்திவிடுவேன். உங்களுக்கு கோபம் வந்தால் ஜெர்ஸி படத்தில் நானி கத்துவது போல் கத்திவிடுங்கள். பிரஷர், கோபத்தை எல்லாம் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாதீர்கள்.கத்திவிட்டீர்கள் என்றால் அது தீர்ந்துவிடும்" என்றார் சாந்தமாக.


Click it and Unblock the Notifications
