twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி

    |

    சென்னை: தனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் நடிகர் விவேக் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து பதில் ட்விட் செய்துள்ளார் பிரதமர் மோடி. மிகச்சிறந்த கலாச்சாரத்தை கொண்ட, இந்தியாவின் மிகப்பழமையான மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது, என்றும் மகாபலிபுரத்தின் அழகான கரையோரங்களும், காலை நேரத்து அமைதியும் எனது எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உகந்த தருணமாக இருந்தது, என்றும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மகாபலிபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார உடையான வேட்டி சட்டையும் தோளில் அங்கவஸ்திரமும் அணிந்து இருந்தார்.

    It was a pleasure to express my thoughts in the oldest language of India-Modi

    அப்போது மகாபலிபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் மோடி எழுதியுள்ளார். இந்த கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

    பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் கோ.தனஞ்ஜெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார்.

    நடிகர் விவேக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மோடியின் கவிதையை பாராட்டி ட்விட் செய்திருந்தார்.

    தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மோடி தற்போது அடுத்தடுத்து ட்வீட் செய்திருக்கிறார். பிரதமர் மோடி தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கு, தமிழ் மொழி அழகானது, தமிழ் மக்கள் எப்பொழுதும் தனித்துவம் மிக்கவர்கள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

    மேலும், மிகச்சிறந்த கலாச்சாரத்தை கொண்ட, இந்தியாவின் மிகப்பழமையான மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது, என்றும் பதில் ட்விட் செய்திருந்தார்.

    நடிகர் விவேக்கின் பாராட்டுக்கு பதிலளித்த மோடி, இயற்கை மீதான மரியாதை என்பது நமது பண்பாட்டின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும், மகத்துவத்தையும் போதிக்கிறது. மகாபலிபுரத்தின் அழகான கரையோரங்களும், காலை நேரத்து அமைதியும் எனது எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உகந்த தருணமாக இருந்தது, என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதைப் பார்த்த பல்வேறு பிரபலங்களும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயனையும் நடிகர் விவேக்கையும் பாராட்டி வருகின்றனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Modi has tweeted his thanks to both producer Dhananjayan and actor Vivek, who have praised Prime Minister Modi's poem. It was a pleasure to express my thoughts in the oldest language of India, with its rich culture, and the beautiful beaches of Mahabalipuram and the tranquility of the morning were the perfect time to express my thoughts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X