“முதலில் பயமா இருந்துச்சு, ஆனா ஆண்ட்ரியா அப்படி செய்யவில்லை": பிரபல யூடியூபரின் முதல் அனுபவம்!
சென்னை: சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது 'வட்டம்' திரைப்படம்.
'மதுபான கடை' இயக்குநரின் அடுத்த படைப்பாக உருவான 'வட்டம்' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
'வட்டம்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், அதில் நடித்துள்ள பிரபல யூடியூபர் மனம் திறந்துள்ளார்.

மதுபான கடை
தமிழ் சினிமாவில் எப்போதாவது சில தரமான திரைப்படங்கள் வெளியாகும், அப்படி 2012ல் வெளியானது 'மதுபான கடை.' இயக்குநர் கமலக்கண்ணனின் முதல் படமாக ரிலீஸான 'மதுபான கடை' விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமகால அரசியலையும் அதன் இயலாமைகளையும் மதுபான கடைகள் மூலம் பேசிய வகையில், இத்திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுமையானது தான்.

வட்டம்
'மதுபான கடை' படத்திற்குப் பிறகு பல வருடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் கமலக்கண்ணன் இயக்கியுள்ள திரைப்படம் 'வட்டம்.' சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, வம்சி கிருஷ்ணா என லீடிங் ஸ்டார்கள் நடித்துள்ள இப்படம், ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் நேற்று வெளியானது. க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள 'வட்டம்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

பிரபல யூடியூபர்
'வட்டம்' படத்தில் பிரபல யூடியூபர் சசியும், மிக முக்கியமான நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். 'நக்கலைட்ஸ்' என்ற யூடியூப் சேனலில், தனது அசட்டுத்தனமான சேட்டைகளுடன் கூடிய காமெடிகளால் அசத்திவரும் இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், தற்போது 'வட்டம்' படத்தில், ராமானுஜம் என்ற கேரக்டரில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

வாய்ப்பும் ஆண்ட்ரியாவும்
'நக்கலைட்ஸ்' யூடியூப் சேனலில் எனது நடிப்பைப் பார்த்தே, 'வட்டம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக, சசி தெரிவித்துள்ளார். முதல் படத்திலேயே சிபிராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட லீடிங் ஸ்டார்களுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது எனவும் கூறியுள்ளார். குறிப்பாக ஆண்டிரியாவுடன் நடிக்கும் போது, அவர் Attitude காட்டுவார் என பயந்தேன். ஆனால், ஆண்ட்ரியா அப்படியெல்லாம் செய்யவில்லை, நல்ல ஃப்ரெண்ட்லியாகவே என்னை ட்ரீட் செய்தார் என, க்யூட்டாக தெரிவித்துள்ளார். 'வட்டம்' படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து, அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகியுள்ளதாகவும் சசி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











