அதை சொன்னா controversy ஆகுமானு தெரியல? சாண்டி மாஸ்டர் பாட்டுக்கு கிருத்திகா உதயநிதி சொன்ன விஷயம்!

சென்னை: சாண்டி மாஸ்டர் கொரியோகிராஃபில் உருவாகி உள்ள இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் பாடல் ரிலீஸ் நிகழ்ச்சியில் கிருத்திகா உதயநிதி பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.

இசைவெளியீட்டு விழாவில் பேசினாலே அது சர்ச்சையை கிளப்பிவிடும் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை சாண்டி மாஸ்டர் பாடல் குறித்து பேசுவதற்கு முன் இதை சொன்னால் controversy ஆகிவிடுமோ என சொல்லி விட்டு அந்த விஷயத்தை பற்றி பேசினார்.

இந்த இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் நடிகர் அரவிந்த் சாமியும் கலந்து கொண்டு இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் குழுவை வாழ்த்தினார்.

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் டிக் டாக் தடை பற்றிய பாடல் இடம்பெற்று செம டிரெண்டான நிலையில், அதே போல இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் பற்றிய பாடலாக இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் எனும் பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. அந்த பாடல் வீடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

சாண்டி மாஸ்டர்

சாண்டி மாஸ்டர்

பாடகி நக்‌ஷா சரண் மற்றும் சாண்டி மாஸ்டர் நடனத்தில் உருவான இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர் தன்னை இதுவரை யாருமே சீஃப் கெஸ்ட்டாக அழைத்தது இல்லை என்றும் நடன நிகழ்ச்சியை நடத்தவே அழைப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

ஒரு மாசம் சொல்லிக் கொடுத்தேன்

ஒரு மாசம் சொல்லிக் கொடுத்தேன்

பாடகி நக்‌ஷா சரண் இந்த இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் பாடல் வீடியோவுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். நக்‌ஷா சரண் தனக்கு நடனம் ஆடத் தெரியாது என்றும் டான்ஸ் கற்றுக் கொண்டு ஆடுகிறேன் என்று சொல்லியதையும் மேடையில் கூறினார். மேலும், ஒரு மாசம் அவருக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன். இதுவரை வேற யாருக்கும் இவ்ளோ நாள் சொல்லிக் கொடுத்தது இல்லை என்றும் சாண்டி பேசினார்.

Controversy ஆகிடுமானு தெரியல

Controversy ஆகிடுமானு தெரியல

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் மருமகள், உதயநிதி ஸ்டாலினின் மனைவியான இயக்குநர் கிருத்திகா உதயநிதி அந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த விஷயத்தை சொன்னால் controversy ஆகிடுமானு தெரியல என பீடிகை போட்டு அந்த விஷயத்தை ஓப்பன் செய்தார். அவர் சொன்னது போலவே தற்போது அந்த விஷயம் டிரெண்டாகி வருகிறது.

அப்படி என்ன சொன்னார்

அப்படி என்ன சொன்னார்

சாண்டி மாஸ்டரின் "செம போதை" பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்வதற்கு முன்னால் தான் அப்படியொரு விஷயத்தை சொல்லி இருந்தார் கிருத்திகா உதயநிதி. மேலும், இந்த பாடலை இயக்கிய இயக்குநர் கார்த்திக் அடுத்ததாக ஆக்‌ஷன் படம் தான் இயக்கப் போகிறார் என்றும் அவர் பார்த்து முறைத்ததும் பயந்தே போய்விட்டேன் என காமெடியாக பேசியதும் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X