உதயநிதி - நயன்தாரா நடிக்கும் 'இது கதிர்வேலன் காதலி'!

ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். முதல்படமே வெள்ளி விழா கண்டதால், அவரை வைத்து படம் இயக்க பலரும் ஆர்வம் காட்டினர்.
ஆனால் உதயநிதி தேர்வு செய்தது, சுந்தரபாண்டியன் படம் கொடுத்த எஸ் ஆர் பிரபாகரனை.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்துக்கு இது கதிர்வேலன் காதலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி 20-ம் தேதி தொடங்குகிறது. சமீபத்தில்தான் நயன்தாரா - உதயநிதி பங்கேற்ற போட்டோ ஷூட் நடந்தது. ஜூன் மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications