»   »  சிம்பு படத்துக்கு வந்தது வம்பு... இது நம்ம ஆளு.. அந்த வட்டிதான் குறுக்க நிக்குது!

சிம்பு படத்துக்கு வந்தது வம்பு... இது நம்ம ஆளு.. அந்த வட்டிதான் குறுக்க நிக்குது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னடா சிம்பு படத்துக்கு இன்னும் யாரும் தடை கேட்டுக் கிளம்பலியேன்னு பார்த்தா... ந்தா வந்துடுச்சி வம்பு.

யெஸ்... பீப் பாய் சிம்புவின் அடுத்த படமான இது நம்ம ஆளு படத்துக்கு தடை கேட்டு ஒரு பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.


Ithu Namma Aalu in trouble

இந்த வழக்கில் முக்கிய விஷயம் வட்டிதான். அதாவது இந்தப் படத்தைத் தயாரிக்க டேக் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் ரூ 2.50 கோடி கடனாகத் தந்திருந்தது. அந்தக் கடன் வட்டி குட்டி போட்டு ரூ 3.31 கோடியாகிவிட்டது.


கடனைத் திருப்பிக் கேட்டால், வட்டியைக் கேக்காதீங்க, அசலை மட்டும் தருகிறேன் என்று டி ஆர் நியாயம் பேச, விஷயம் படத்துக்கு தடை கேட்டு வழக்காக மாறிவிட்டது.


Ithu Namma Aalu in trouble

என்ன சொல்கிறார் டி ராஜேந்தர்?


சினிமா வியாபாரத்தில் முன் பின் பார்த்து பிஸினஸ் செய்வது சகஜம். இப்போது வட்டியை நான் தள்ளுபடி செய்யக் கேட்கவில்லை. மாறாக இப்போது கேட்க வேண்டாம், படம் வெளியான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்கிறேன்.


மிகுந்த சிரமத்துக்கிடையில் இந்தப் படத்தை வெளியிடுவதால்தான் இந்த கோரிக்கை, என்கிறார்.


டிஆர் பக்கம் நியாயமிருக்கா.. சொல்லுங்க நியாயமாரே!

English summary
Ithu Namma Aalu movie is facing financial crisis and the financier gone to court against the release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil