ரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்

சென்னை: ரஜினிகாந்தின் டிவிட்டை தொடர்ந்து #இதுவும்_கடந்து_போகும் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.

Recommended Video

Rajinikanth wishing for tamil new year 2020

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றாகிவிட்ட நிலையில் அவ்வப்போது, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்திருந்தார். மேலும் இதுவும் கடந்து போகும் என்பதை ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து #இதுவும்_கடந்து_போகும் என்ற ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில் ட்ரென்ட்டாகி வருகிறது.

வெற்றிக்கான மந்திரம்

ரஜினியின் ரசிகரான இவர், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவா.. என்றும் மக்கள் தலைவர் வழியில் என இதுவும் கடந்து போகும் என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரான இவர், இதுவும் கடந்து போகும் என்பது வெற்றிக்கான மந்திரம் என பதிவிட்டுள்ளார்.

எப்போ ஒழியும்

மற்றொரு ரசிகரான இவர் கேக்கறதுக்கு கூச்சமா இருக்கு.. வந்து 3 மாசம் தானே ஆகுது.. இருந்தாலும் தாங்க முடியல அதனால கேக்குறேன்.. 2020 எப்போ ஒழிஞ்சி போகும் என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகரான இவர் காற்று அடிப்பது உயிர்கள் வாழ.. தலைவர் வருவது உயிர்களை காக்க என்று பதிவிட்டுள்ளார்.

காமெடி பீஸ்கள்

ரஜினியின் இந்த ரசிகர், அது என்னமோ தலைவா நீங்க சொல்லும் சொல்லுக்கு மட்டும் ஒரு சக்தி உள்ளது ஃபுல் பாஸிட்டிவ் சக்தி உள்ளது கவலை மறந்து உள்ளம் சக்தி பெற்று முன்னேறி உழைக்க உதவுது..அதனால் தான் உங்கள நேரடியா எதிர்க்காம மறைமுகமா காமெடி பீஸ்கள் எதிர்க்கிறது என பதிவிட்டுள்ளார்.

ஏறி மிதிச்சிட்டான்

#இதுவும்_கடந்து_போகும்.. யார் சொன்னது.. தலைவர் ரஜினிகாந்த்.. ஆண்டவன் அருள் பெற்ற சித்தர் சொல்லியது.. அப்ப நிச்சயம் கடந்து போகும்... கொரோனா அழியும் நாள் விரைவில் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரானான இவர், என்னங்க சட்டை எல்லாம் ரத்தமா கெடக்கு?
2019 ல தான் படாத பாடு படுத்தி எடுத்துட்டான் 2020 ல நல்ல படியா வெச்சிக்குவான்னு நம்பி இருந்தேன்.. அந்த சண்டாளன் 2020 என்ன நெனச்சான்னு தெரியல.. திடீர்ன்னு குப்புற போட்டு திங்குதிங்குன்னு ஏறி மிதிச்சிட்டான்.. என 2020ஆம் ஆண்டை இதுவும் கடந்து போகும் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X