நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் "இதுவும் கடந்து போகும்" பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சென்னை : நடிகை நயன்தாரா தனது சொந்த தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் தான் நெற்றிக்கண்.

Recommended Video

Top 5 Beats: பிக் பாஸ் 5ல் கமலுக்கு சம்பளம் இவ்வளவா? கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவின் மார்க்கெட்!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா ஓடிடியில் வெளியாகுமா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் முதல் பாடல் "இதுவும் கடந்து போகும்" வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோக்களின் படங்களுக்கு

ஹீரோக்களின் படங்களுக்கு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தொடர்ந்து நடித்து வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வகையில் நயன்தாரா லீட் ரோலில் நடித்து வெளியான பல திரைப்படங்கள் ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை புரிந்து வருகிறது. இவ்வேளையில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சவாலான கதாபாத்திரங்களை

சவாலான கதாபாத்திரங்களை

பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் என சொல்லப்படும் நெற்றிக்கண்ணில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ளார். இதுவரை பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த நயன்தாரா இந்த படத்தில் முதன்முறையாக பார்வையற்ற பெண்ணாக நடித்திருப்பது பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

காட்சிக்கு காட்சி திரில்லருடன் இதன் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவராலும் கொண்டாடப்பட்டது. விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இணைந்து நடத்திவரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் "இதுவும் கடந்து போகும்" வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்டிமென்டாக 9

சென்டிமென்டாக 9

இசையமைப்பாளர் கிரிஷ் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதி இருக்கும் "இதுவும் கடந்து போகும்" பாடல் வரும் ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க நயன்தாராவின் திரைப்படம் என்பதால் 9 மணி 9ம் தேதி என சென்டிமென்டாக 9 அடிப்படையில் இந்த பாடல் வெளியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X