ஒரு பெண் எப்படி குயின் போல வாழ வேண்டும் என்பதை இலக்கியமாக சொல்லும் கதை தான் பென்குயின்
Recommended Video
சென்னை : கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் சர்கார் படத்தில் நடித்திருந்தார் ,அதற்கு பிறகு தெழுங்கில் மன்மதுடு 2 படத்தில் நடித்திருந்தார்.கீர்த்தி சுரேஷ் மளையாள தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனாகாவின் மகள் .இவர் குழந்தையாக இருக்கும் போதே சில படங்களில் நடித்துள்ளார். மளையாளத்தில் 'கீதாஞ்சலி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தன் முதல் படத்திலே மளையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நடித்தார் மற்றும் அந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். இது எந்த ஒரு கதநாயகியும் செய்யாத ஒரு அறிமுகம் ,தனது முதல் படத்திலே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி பலரது பாரட்டையும் பெற்றார் .

இதற்கு பிறகு ரிங் மாஸ்டர்,தமிழில் இது என்ன மாயம் போன்ற படங்களில் நடித்தார் இதற்கு பிறகு ரஜினிமுருகன் படம் அவருக்கு தமிழில் நல்ல பெயரை பெற்று தந்தது .அதற்கு பிறகு தமிழ்,தெழுங்கு என மாறி மாறி நடித்து வந்தார்.2018ல் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளி வந்த மகாநடி படம் மாபெரும் வெற்றி அடைந்தது மற்றும் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதையும் பெற்று தந்தது .
இதில் நடிகை சாவித்ரி போலவே மிகசிறப்பாய் நடித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது கீர்த்தி சுரேஷ் மளையாளத்தில் மோகன் லாலுடன் மரக்கர்:அரபிகடலிண்டே சிம்கம் படத்தில் நடித்து வருகிறார் .அதை தொடர்நது தெழுங்கில் மிஸ் இந்தியா படத்திலும் நடித்திருக்கிறார்.தற்போது இவர் கார்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெண்குயின் என்ற படத்தில் நடித்து இருக்கிறார், தற்போது படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவேறியுள்ளது.இதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி படக்குளுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இதற்கு முன் அவியல் மற்றும் மேயாத மாண் படத்தை தயாரித்து உள்ளது ,அதற்கு பிறகு பெண்குயின் படத்தை ஸ்டோன் பெஞ்ச் மூலம் தயாரித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். பென்குவின் படம் மிக வித்யாசமான திரைக்கதை கொண்டது என்று அனைவரும் சொல்லி வருகின்றனர். ஒரு பெண் எப்படி குயின் போல வாழ வேண்டும் என்பதை இலக்கியமாக சொல்லும் கதை தான் பென்குயின் என்று சிலர் சொல்லி வருகின்றனர். கீர்த்தி சுரேஷுக்கு இந்த படமும் பல விருதுகளை வாங்கி தருமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் .


Click it and Unblock the Notifications











