தீபாவளி பொங்கல் இல்லே... ஆனாலும் கோலிவுட்டில் இன்னிக்கு 'பெரிய வெள்ளி'!

By Shankar

தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டுக்குக் கூட இவ்வளவு படங்கள் வெளியாகுமா தெரியவில்லை. இந்த வெள்ளிக்கிழமை அத்தனை பெரிய மற்றும் நடுத்தர படங்கள் வெளியாகி ஆச்சர்யப்பட வைத்துள்ளன.

பொதுவாகவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரா வாரம் ஏகப்பட்ட படங்கள் வந்து குவிகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக வெள்ளிக்கிழமை தோறும் சராசரியாக நான்கு படங்கள் வந்து, பெருமளவு தியேட்டர்களைவிட்டு ஓடியும் விட்டன.

6 தமிழ்ப் படங்கள்

6 தமிழ்ப் படங்கள்

இந்த வாரம் 6 புதிய படங்களும், அதே எண்ணிக்கையில் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களும் வெளியாகியுள்ளன.

அரண்மனை

அரண்மனை

இவற்றில் பெரிய படம் என்று பார்த்தால் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை. ஹன்சிகா, லட்சுமி ராய், வினய், சந்தானம் நடித்துள்ள இந்தப் படம் அதிக அரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆடாம ஜெயிச்சோமடா

ஆடாம ஜெயிச்சோமடா

இந்தப் படம் கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வீராப்பு, தில்லு முல்லு படத்தை இயக்கிய பத்ரியின் அடுத்த படம். கருணாகரன், சிம்ஹா, விஜயலட்சுமி நடித்துள்ளனர்.

ஆள்

ஆள்

விதார்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது. ஒரு இந்திப் படத்தின் ரீமேக். ஹார்த்திகா ரெட்டி நாயகியாக நடித்துள்ளார். ஆனந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

மைந்தன்

மைந்தன்

மலேசியாக்காரர்கள் தயாரித்துள்ள படம் இது. தயாரிப்பாளரான புன்னகைப் பூ கீதா நடித்துள்ளார். குமரேசன் என்பவர் இயக்கியுள்ளார்.

ரெட்ட வாலு

ரெட்ட வாலு

ஜெய இளவரசன் தயாரித்திருக்கும் படம் ரெட்டவாலு. இதில் நாயகனாக அகில், நாயகியாக சரண்யா நாக் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தேசிகா.

தமிழ் செல்வனும் 50 கிமீ கலைச் செல்வியும்

தமிழ் செல்வனும் 50 கிமீ கலைச் செல்வியும்

பி.பாண்டியன் எழுதி, இயக்கியிருக்கும் படம் தமிழ் செல்வனும் 50 கிமீ கலைச் செல்வியும். ஏ ஜே நிறுவனம் தயாரித்துள்ளது.

இவை தவிர, மகேஷ் பாபுவின் தெலுங்குப் படம் ஆகடு அதிக அரங்குகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X