கவுதம் வாசுதேவ் மேனனுக்கு இப்போ 'தங்கமான' நேரம்!

By Shankar

Its Golden time to Goutham Vasudev Menon
பிரச்சினைகளிலிருந்து மீண்டிருக்கும் இயக்குனர் தயாரிப்பாளர் கவுதம் வாசுதேவ மேனனுக்கும் அவரது பட தயாரிப்பு நிறுவனமான போட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் இப்போது 'தங்கமான' நேரம்.

அவர் தயாரித்துள்ள தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தரமான வித்தியாசமான கதைகளை, தகுதியான திறமையானவர்களை தேர்ந்தெடுத்து படம் இயக்கும் வாய்ப்பை வழங்கி வருகிறார்.

அப்படி உருவாகும் இரண்டாவது படம்தான் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்'. ஹைதராபாத் நகரில் நடை பெறும் இந்த தமிழ் தெலுங்கு இரு மொழிப் படத்தை பிரபு தேவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிரேம் சாய் இயக்குகிறார்.

இயக்குனர் பிரேம் சாய் பற்றி தயாரிப்பாளர் கவுதம் மேனன் கூறுகையில், "பிரேம் சாய் என்னை மிகவும் கவர்ந்த திறைமையான இயக்குனர். எதையும் திட்டமிட்டு நேர்த்தியுடன் செயல்பட்டு வருகிறார்.

தெளிவான சிந்தனை, தன்னுடைய கதையின் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை, மற்றும் எண்ணத்தையும் எழுத்தையும் படமாக்கும் பாங்கு என்னைக் கவர்ந்துவிட்டது," என்றார்.

ஜெய் இப்படத்தில் நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் யாமி கவுதம். இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ், நாசர், அஷுடோஷ் ரானா மற்றும் தம்பி ராமையா நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ரஷ் பார்த்த பிரபுதேவா, உடனே யாமி கவுதமே தனது இந்திப் படத்தின் நாயகியாக்கிவிட்டாராம்.

அடுத்த மாதம் தங்கமீன்கள் வெளியாகும்போது, அத்துடன் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் பட ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X