For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  HBDgoundamani : அட்ராசக்க.. அட்ராசக்க.. இன்னைக்கு நம்ம கவுண்டருக்கு 80வது ஹேப்பி பர்த்டேங்க!

  |

  சென்னை: நடிகர் கவுண்டமணி தனது 80வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

  தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காமெடி நடிகர் கவுண்டமணி. இவரது பெயரை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது. 1980 களில் ஆரம்பித்த இவரது சகாப்தம் இன்றும் தொடர்கிறது.

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் எனும் சிறிய ஊரில் பிறந்தவர் சுப்ரமணி. ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த போது, சக நடிகர்களுக்கு இவர் கொடுக்கும் கவுண்டர்களால் கவுண்டர் மணியாக மாறினார். நாளடைவில் அது மருவி கவுண்டமணியானது. அதே பெயரில், 16 வயதினிலே படத்தில் இயக்குனர் பாரதிராஜா அவரை அறிமுகப்படுத்தினார்.

  "எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்"... அடம்பிடித்த ராதாரவி... சமாதானம் செய்த யோகி பாபு!

  செந்தில் - கவுண்டமணி

  செந்தில் - கவுண்டமணி

  கவுண்டமணி இதுவரை 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். செந்திலுடன் இவர் கூட்டணி அமைத்து நடித்த படங்கள் அனைத்துமே செம ஹிட் காமெடிகள். சின்னக்கவுண்டர், நானும் ஹீரோதான் உள்பட ஏராளமான படங்களின் வெற்றிக்கு செந்தில் - கவுண்டமணி காமெடி தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

  ரொமான்டிக் லுக் காமெடி

  ரொமான்டிக் லுக் காமெடி

  செந்திலுடனான கூட்டணியை முறித்த பிறகு, ரஜினி, சத்யராஜ், கார்த்திக் என ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடி பண்ண ஆரம்பித்தார் கவுண்டமணி. அதுவும் செமயாக ஒர்க்கவுட் ஆனது. மன்னன், பாபா, முறைமாமன், பிரம்மா, நடிகன், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தவர் கவுண்டர். மேட்டுக்குடி படத்தில் அவர் கொடுக்கும் ரொமான்டிக் லுக் அல்டிமேட் காமெடி.

  ஹீரோவாக நடித்தவர்

  ஹீரோவாக நடித்தவர்

  கவுண்டமணி காமெடியான மட்டும் இல்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அது தான் உண்மை. ரம்யா கிருஷ்ணனின் ஆரம்பகால சினிமா கேரியரில் கவுண்டமணிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். மனோரமா, கோவை சரளா உள்பட நிறைய நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

  அதிக சம்பளம்

  அதிக சம்பளம்

  ஒரு காலத்தில் கவுண்டமணி இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் தமிழ் சினிமாவில் இருந்தது. அப்போது அவர் வாங்கிய சம்பளம் ரஜினியின் கால்ஷீட் சம்பளத்தைவிட அதிகம் என்ற பேச்சும் உண்டு. அந்த காலகட்டத்தில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும், தினமும் ஒரு காரில் தான் வருவார் கவுண்டமணி. ஆரம்ப காலங்களில் சினிமா அவருக்கு தந்த கசப்பான அனுபவங்களால், தினமும் ஒரு காரில் வருவதை கவுரமாக நினைத்தார்.

  கவுண்டமணியின் ஸ்பெஷாலிட்டி

  கவுண்டமணியின் ஸ்பெஷாலிட்டி

  கவுண்டமணியின் ஸ்பெஷாலிட்டியே அவரது டைமிங் பஞ்ச் வசனங்கள் தான். அட்ராசக்க, உலக நடிப்புடா சாமி, என அவர் பேசிய வசனங்கள், இன்னும் நமக்கு கவுண்டர் டயலாக்குகளாக பயன்படுகிறது. மீம்ஸ் போடு இணையவாசிகளின் எவர்டைம் பேவரைட் ஸ்டார் கவுண்டமணி தான்.

  உலக சினிமா பிரியர்

  உலக சினிமா பிரியர்

  கவுண்டமணி ஒரு உலக சினிமா பிரியர். ஹாலிவுட் முதல் கொரியா படங்கள் வரை அனைத்தையுமே பார்த்துவிடுவார். யாராவது ஒரு இயக்குனர் அவரிடம் கதை சொன்னால், உடனடியாக அது எந்த ஆங்கிலப் படத்தின் தழுவல் என்பதை சொல்லி கவுண்டர் கொடுத்துவிடுவார்.

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பதில்லை. இருந்தாலும், அவரது காமெடிகள் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி கொண்டு தான் இருக்கின்றன. பல ஆண்டுகளாக நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் அந்த மகாகாமெடியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  English summary
  Actor Goundamani, who has contributed a lot of comdey to tamil cinema is celebrating his birthday today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X