twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ponniyin Selvan Box Offce: ஃப்ரீ ப்ரமோஷன் வேற.. 6 நாட்களில் பொன்னியின் செல்வன் வசூல் இத்தனை கோடியா?

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை பற்றித் தான் கடந்த சில நாட்களாக பெரிய சர்ச்சையே வெடித்துள்ளன.

    ராஜ ராஜ சோழன் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசியதில் இருந்து நேற்று கமல் பேசியது வரை படத்துக்கு பயங்கரமான ஃப்ரீ ப்ரமோஷனாக மாறி உள்ளது.

    அப்படி படத்தில் என்னதான் இருக்கு பார்ப்போம் என அனைவரும் விடுமுறை நாட்களில் படையெடுக்க படத்தின் வசூல் பல மடங்காக அதிகரித்துள்ளது.

    நானே வருவேன் ஃப்ளாப்பா? பொன்னியின் செல்வனை முகலாயர்களாக காட்டவில்லை... தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டிநானே வருவேன் ஃப்ளாப்பா? பொன்னியின் செல்வனை முகலாயர்களாக காட்டவில்லை... தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி

    பொன்னியின் செல்வன் பார்த்த கமல்

    பொன்னியின் செல்வன் பார்த்த கமல்

    நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினருக்கு போனில் வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில், சியான் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் பட நடிகர்களுடன் ஜாஸ் சினிமாஸில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டி உள்ளார்.

    விக்ரம் படத்திற்கு பிறகு

    விக்ரம் படத்திற்கு பிறகு

    விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டுக்கு பிறகு கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்திற்கு வாய்ஸ் கொடுத்து இருந்தார். அவரது குரலில் தான் சோழர்களின் கதையை சொல்லி விட்டு மணிரத்னம் படத்தையே ஆரம்பித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருந்த கமல் நேற்று படக்குழுவினருடன் படத்தை பார்த்து பாராட்டி உள்ளார்.

    97 வயது தாத்தா

    97 வயது தாத்தா

    ஆயுத பூஜை, விஜய தசமி என இரு நாட்கள் வார நாட்களிலேயே விடுமுறையாக இருந்தது மற்றும் காலாண்டு விடுமுறை போன்றவைகள் காரணமாக 1 வயது குழந்தை முதல் 97 வயது தாத்தா வரை பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துள்ளனர். இதனால் விக்ரம் படத்தை விட அதிவேகமாக பாக்ஸ் ஆபிஸ் சாதனையை பொன்னியின் செல்வன் நிகழ்த்தி வருகிறது.

    6 நாட்களில் எவ்வளவு

    6 நாட்களில் எவ்வளவு

    5 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் 6ம் நாளான நேற்றும் விடுமுறை என்பதால் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பல இடங்களிலும் தொடர்ந்து அதிக காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், 350 கோடி வசூலை பொன்னியின் செல்வன் இதுவரை மொத்தமாக உலகளவில் எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழ்நாட்டில் 100 கோடி

    தமிழ்நாட்டில் 100 கோடி

    6 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் அதிவிரைவாக 100 கோடி வசூலை கடந்த படமாக பொன்னியின் செல்வன் மாறி உள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகள் மற்றும் உலகளவில் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது தான் இப்படியொரு வசூல் சாதனையை படைக்க காரணம் என்கின்றனர். விரைவில் விக்ரம் படத்தின் 400 கோடி வசூலை பொன்னியின் செல்வன் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    500 கோடி கன்ஃபார்ம்

    500 கோடி கன்ஃபார்ம்

    2வது வார முடிவில் பொன்னியின் செல்வன் உலகளவில் கண்டிப்பாக 500 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான காவிய படத்தைக் காண மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    English summary
    Mani Ratnam's Ponniyin Selvan turned a debate material in Tamil Nadu. It will collect a huge box office on 6th day also. Ponniyin Selvan reaches 350 crore plus box office collection details are circulated.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X