முன்னாள் கணவருக்கு கல்யாணம்.. அமலா பால் போட்ட அந்த டிவிட்!
சென்னை: முன்னாள் கணவர் விஜய்க்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதுதான் நான் என டிவிட்டியுள்ளார் அமலாபால்.
அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆடை. இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து வருகிறார்.
இதன் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உருக்கமான அறிக்கை
இந்நிலையில் அண்மையில் விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டார். ஆடை படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாலேயே விஜய் சேதுபதியின் 33வது படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக மிக உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதுதான் நான்
இதைத்தொடர்ந்து அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆடை ஹேஷ்டேக்கில் இதுதான் நான் என ஒரு பதிவை டிவிட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் வாழ்வேன்
நான் போராடுவேன். நான் வாழ்வேன். பெரிய சிறிய தடைகள் வரட்டும். அதில் இருந்து மீண்டு வந்து ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை தகர்த்து ஊதித் தள்ளுவேன். எனது பலத்தை மட்டும்தான் நான் நம்புகிறேன். சுதந்திரமும் மகிழ்ச்சியும் முக்கியம். தைரியம் இருந்தால் தோல்வி அடைய மாட்டீர்கள். இதுதான் நான். இதுதான் என் கதை #ஆடை என பதிவிட்டுள்ளார் அமலா பால்.

முன்னாள் கணவருக்கு திருமணம்
இது ஆடை படத்தின் கதையா அல்லது அமலா பாலின் முன்னாள் கணவரான இயக்குநர் ஏஎல் விஜய்க்கு வரும் 11ஆம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எல்லோரையும் குத்தும் வகையில் அமலா பால் இப்படி ஒரு டிவிட்டை போட்டுள்ளாரா என்பத அவருக்கே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











