சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தோடு மோதும் கவினின் ஹாய்.. இயக்குநர் சொல்வது இதைத்தான்

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஐந்து படங்களில் டாடா படம் மட்டுமே சூப்பர் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் நடிகை நயன்தாராவும் நடித்திருக்கிறார். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அன்றுதான் சூர்யாவின் விஸ்வநாந்த் அண்ட் சன்ஸ் படமும் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

கவினுக்கு முதலில் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தன்னை முதலில் நிலைநிறுத்திக்கொண்டார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்றார். முடிந்த அளவுக்கு சிறப்பாகவே விளையாடினார். அதுவும் அவருக்கு பலமாகவே இருந்தது. தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த அவருக்கு திரைத்துறை கதவுகள் திறந்தன. தொடர்ச்சியாக படங்களில் நடித்த அவருக்கு டாடா திரைப்படம் சூப்பர் ஹிட்டை கொடுத்தது.

It s Not a Clash Hi Director Vishnu Edavan Reacts to Suriya s Vishwanath and Sons Box Office Face-Off
Photo Credit:

தொடர் தோல்வியில் கவின்: அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு நடித்த ஸ்டார், ப்ளடி பெக்கர், மாஸ்க் ஆகிய மூன்று படங்களும் சரியாக போகவில்லை. அதேசமயம் அம்மூன்று படங்களிலும் கவினின் நடிப்பு வெகுவாகவே பாராட்டப்பட்டது. முக்கியமாக ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான நடிப்பையும், கெட்டப்பையும் கொடுத்திருந்தார். தனக்கு இன்னும் அதிகம் திறமை இருப்பதை அந்தப் படங்களின் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார் அவர்.

Also Read
கயாடு லோஹரை பாருங்க சார்.. சொக்கிப்போகும் ஜிவி பிரகாஷ்.. இம்மார்ட்டல் பாடலில் மேடம் அசத்திட்டாங்க
கயாடு லோஹரை பாருங்க சார்.. சொக்கிப்போகும் ஜிவி பிரகாஷ்.. இம்மார்ட்டல் பாடலில் மேடம் அசத்திட்டாங்க

விஷ்ணு எடவன் இயக்கத்தில்: இப்போது அவர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருடன் நயன்தாராவும் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்தான் இந்த விஷ்ணு எடவன். லோகேஷின் படங்களில் முதுகெலும்பாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். கண்டிப்பாக லோகேஷிடம் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் இந்தப் படத்தில் விஷ்ணு இறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட்டில் ரிலீஸ்: இப்படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அன்றைய தினம்தான் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. சூர்யா பெரிய ஹீரோக்களில் ஒருவர். அவர் படத்துடன் கவின் மோதும் நிலை இருக்கிறது. எனவே ஹாய் படம் தப்பிக்குமா என்ற பயமும் அவரது ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன்.

விஷ்ணு சொன்னது: அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "சூர்யா எப்போதுமே வேறு லெவல். இது போட்டியே கிடையாது. சூர்யா படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால் எங்கள் படத்தையும் பார்ப்பார்கள். யாரடி நீ மோகினி, சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்கள் ஒரே நாளில்தான் ரிலீஸாகின. இருந்தாலும் இரண்டு படங்களுமே குடும்ப ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. சூர்யா ஒரு பெரிய நட்சத்திரம். ரசிகர்கள் மோதிக்கொள்கிறார்கள். ரசிகர்களை மட்டுமே இதற்காக குறை சொல்ல முடியாது.

அஜித்துக்காக: நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அஜித் நடித்த பில்லா படம் வதது. அதை பார்த்துவிட்டு வகுப்பறைக்குள் சென்று எனது சட்டையை கிழித்து கம்பேக் டா என்று கத்தினேன். அப்போது நிறைய சண்டையும் போட்டேன். இப்போதுவரை அப்படி ஏன் செய்தேன் என ஞாபகம் இல்லை" என்றிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X