twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாரும் அது சிஜின்னு நினைச்சாங்க.. ஆனால், அது ரியல்.. வெளியானது எந்திரன் படத்தின் வெளிவராத போட்டோ!

    |

    சென்னை: 2008ம் ஆண்டு ஷங்கரின் எந்திரன் படத்தின் டைட்டில் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.

    Recommended Video

    எந்திரன் SHOOTINGஇல் ரஜினி செய்த திருட்டுத்தனம் | ACTOR RAAGHAV | V-CONNECT | Filmibeat Tamil

    அந்த புகைப்படம் சிஜியில் செய்யப்பட்டது என்றே பலரும் கருதிய நிலையில், அந்த போட்டோ சிஜி இல்லை என்ற உண்மையை புகைப்படக் கலைஞர் ரிச்சார்ட் எம். நாதன் தற்போது, இதுவரை வெளிவராத போட்டோவை வெளியிட்டு ரகசியத்தை உடைத்துள்ளார்.

    அந்த புகைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள், ப்பா என்னாம்மா ஹார்ட் ஒர்க் போட்டிருக்காரு என அசந்து பாராட்டி வருகின்றனர்.

    கஸ்தூரியா இது.. அடையாளமே தெரியல..குழம்பி போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் !கஸ்தூரியா இது.. அடையாளமே தெரியல..குழம்பி போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் !

    எந்திரன்

    எந்திரன்

    ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் நடித்த ரோபாட்டிக் சயின்ஸ் ஃபிக்‌ஷன் ரொமான்டிக் படம் தான் எந்திரன். டாக்டர் வசீகரனாகவும், சிட்டி எந்திரனாகவும் ரஜினி இரட்டை வேடங்களில் கலக்கி இருப்பார். ஐஸ்வர்யா ராயின் அழகும், 2.0 ரஜினியின் வில்லத்தனமும் அந்த படத்தை மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைத்தது.

    காதலில் விழுந்த ரோபோ

    காதலில் விழுந்த ரோபோ

    ஹாலிவுட்டில் வெளியான அர்னால்டின் டெர்மினேட்டர் பட ஸ்டைலில் தமிழில் ஒரு ரோபோ படம் எடுக்க வேண்டும் என நினைத்த ஷங்கர், தமிழ் ரசிகர்களையும் மனதில் வைத்துக் கொண்டு, ரோபோவுக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்றும், மனிதர்களை போலவே எல்லா உணர்சிகளும் அதுக்கும் வந்தால் என்ன எல்லாம் நடக்கும் என எந்திரன் படத்தை இயக்கி இருந்தார்.

    ரோஜாவுடன் ரோபோ

    ரோஜாவுடன் ரோபோ

    2010ம் ஆண்டு எந்திரன் படம் திரைக்கு வந்தது. 2008ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் என்ற போஸ்டர் லுக்கில் ரஜினி ரோபோவாக கையில் ரோஜாவை வைத்துக் கொண்டு, நிற்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் ஆடிப் போனார்கள்.

    சிஜி இல்லை

    சிஜி இல்லை

    அந்த போஸ்டர் சிஜியில் எடிட் பண்ண ஒன்று என்றும், நடிகர் ரஜினி, அதற்காக போட்டோஷூட் நடத்தவில்லை என்றே இத்தனை காலம் பலரும் நினைத்து இருந்த நிலையில், அது சிஜி இல்லை, ரஜினியை வைத்தே அந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாக போட்டோகிராஃபர் ரிச்சர்ட் எம் நாதன் தற்போது மிகப்பெரிய ஒரு ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

    ரொம்ப கஷ்டப்பட்டார்

    ரொம்ப கஷ்டப்பட்டார்

    சில்வர் நிற மேக்கப் போட்டுக் கொண்டு, சில்வர் நிற ஹெல்மெட், சில்வர் நிற சன்கிளாஸ் எல்லாம் அணிந்துக் கொண்டு, அந்த போட்டோஷூட்டில் நடிகர் ரஜினியே ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணார் என்றும், இதுவரை வெளியிடப்படாத அதன் ‘ரா' போட்டோவையும் வெளியிட்டு போட்டோகிராஃபர் ரஜினி மற்றும் ஷங்கரின் டெடிகேஷனை பாராட்டியுள்ளார்.

    சூரியனை என்றும்

    சூரியனை என்றும்

    ரிச்சர்ட் எம் நாதன் நேற்று இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் எந்திரன் படத்தின் போட்டோஷூட்டில் நடைபெற்ற இந்த ரகசியத்தை ஆதாரத்துடன் தற்போது வெளியிட்டுள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள், அவரது டெடிகேஷனை பாராட்டி வருகின்றனர். சூரியனை என்றும் கைகளால் மறைக்க முடியாது என இந்த தலைவர் ரசிகர் பதிவிட்டுள்ளார்.

    60 வயசுல

    60 வயசுல

    எந்திரன் படம் எடுக்கும் போது நடிகர் ரஜினிக்கு கிட்டத்தட்ட 60 வயசு, அந்த வயதிலும், இப்படி ஒரு டெடிகேஷனை செய்துள்ளது பாராட்டுக்குரியது. 2.0 படத்திலும் ரஜினி வேற லெவலில் உடல் உழைப்பைக் கொட்டி நடித்திருப்பார். அவர் இன்னும் பல காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    சும்மா ஒண்ணும் கொடுக்கல

    சும்மா ஒண்ணும் கொடுக்கல

    வெறும் ஸ்டைல்க்கு மட்டும் கிடைத்த சூப்பர்ஸ்டார் பட்டம் இல்லை கடின உழைப்புக்கு கிடைத்தது. மக்களுக்கு எது பிடிக்கும் என நினைக்கும் யுக்தி கலந்த திறமை இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். ஒரே ஓர் சூப்பர்ஸ்டார் தான் இந்த ஜென்மத்தில் என ரஜினியின் தீவிர ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Cinematographer Richard M Nathan, who had done the photoshoot for the film in 2008 has now revealed this interesting bit of trivia along with the raw photo of superstar Rajinikanth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X