அது நான் இல்ல.. எவனோ பண்ண ஏமாத்து வேலை..கோபத்தில் கொந்தளித்த டிக்டாக் இலக்கியா!

சென்னை: அது என் அக்கவுண்டே இல்லை எவனோ செய்த ஏமாத்து வேலை என்று டிக்டாக் இலக்கியா இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்ட பிறகும் கூட பிற சமூக வலைதள பக்கங்களில் அதே வேலையை செய்து வருகிறார்.

Its not my account, its a fake account TikTok elakkiyaa posted a video on Instagram

டிக்டாக் இலக்கியா: டிக்டாக் மூலம் பிரபலமான இவர், ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார். அது இல்லாமல் வேறு சில படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அண்மையில் இணையதளம் ஒன்றில் நடிகை ஷகிலாவின் கேள்விக்கு பதில் அளித்த இவர், மனம் விட்டு பல விஷயத்தை பேசி இருந்தார்.

அது போலி அக்கவுண்ட்: இந்நிலையில், தனது பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கப்பட்டு மோசடி நடப்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், எல்லாருக்கும் வணக்கம் என்னோட பெயரில் கடந்த மூன்று, நான்கு வருஷமா ட்விட்டரில் பேக் அக்கவுண்ட் உலவி வருகிறது. அது என்னுடைய அக்கவுண்ட் கிடையாது. இன்ஸ்டாகிராம் பலர் எனக்கு இதுகுறித்து மெசேஜ் அனுப்பி இருந்தாங்க, அது உங்க அக்கவுண்ட்டுனு நினைச்சு பணம் அனுப்பிவிட்டேன் என்று, எனக்கும் அந்த போலி அக்கவுண்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

Its not my account, its a fake account TikTok elakkiyaa posted a video on Instagram

தயவு செய்து இப்படி பண்ணாதீங்க: அந்த ட்விட்டர் அக்கவுண்டில் ப்ளு டிக் இருக்கு என்பதற்காக அது எல்லாம் என்னுடைய அக்கவுண்டாகவிடாது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்ற ஒரு பிரச்சனையைத்தான் நான் சந்தித்தேன். இது போன்று போலி கணக்கை தொடங்கி ஏமாற்றிவிடுகிறீர்கள். ஆனால், இதனால், எனக்குத்தான் மன வேதனையும் கஷ்டமும் ஏற்படுகிறது. இனிமேல் தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்.

Its not my account, its a fake account TikTok elakkiyaa posted a video on Instagram

புகார் அளிப்பேன்: இன்ஸ்டாகிராம், பேஸ் புக்,ட்விட்டர் என என் பேரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்து சைபர் க்ரைமில் புகார் கொடுக்கப்போகிறேன். நீங்களும் யாரு என்னனு தெரியாம பணத்தை அனுப்பி அதற்கு நான் தான் காரணம் என்று தயவு செய்து சொல்லாதீங்க என்று நடிகை இலக்கியா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X