அய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...!

சென்னை: விவசாயி படத்தில் விஜய் சேதுபதியின் புதிய லுக் என இணையத்தில் வைரலான புகைப்படம் நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் கிருஷி என்பவருடையது என்பது வந்துள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அந்த கதைக்கு தேவையான தோற்றத்தில் நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சிவாஜி, கமல், விக்ரம் ஸ்டைலை பாலோ செய்து வரும் விஜய் சேதுபதி, தனது யதார்த்தமான நடிப்பால் படத்திற்கு படம் அசத்தி வருகிறார்.

தற்போது அவர், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதிலும் வித்தியாசமான தோற்றம் தான் அவருக்கு என்கின்றனர்.

போலீஸ்:

போலீஸ்:

விஜய் சேதுபதி போலீசாக நடித்துள்ள மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

பிராஸ்தடிக் மேக்கப்:

பிராஸ்தடிக் மேக்கப்:

இத்திரைப்படத்தில் அவர் 75 வயது முதியவர் வேடத்தில் நடிக்கிறார். பிராஸ்தடிக் மேக்கப்பில் அவரது தோற்றம் மிக தத்ரூபமாக அமைந்துள்ளது. படத்திற்கு படம் கதாபாத்திரத்தில் மட்டுமல்ல தோற்றத்திலும் அவர் வித்தியாசம் காட்டி வருகிறார்.

வைரல் புகைப்படம்:

வைரல் புகைப்படம்:

இந்நிலையில் விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கும் புதிய படத்தின் கெட்டப் என ஒரு முதியவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அச்சு அசல் விஜய் சேதுபதிக்கு மேக்கப் போடப்பட்டது போல் இருந்ததால், அனைவருமே அதை விஜய் சேதுபடி என்றே நம்பினர். புதிய படமொன்றில் அவர் முதிய விவசாயி வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆசிரியர் கிருஷி:

ஆசிரியர் கிருஷி:

ஆனால் அந்த புகைப்படத்தில் உள்ளவர் விஜய் சேதுபதி இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்தப் படத்தில் இருப்பவர் நெல்லை மாவட்டம் சிந்துபூத்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இலக்கிய விமர்சகர் ஆசிரியர் கிருஷி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மௌனம் காக்கும் விஜய்சேதுபதி:

மௌனம் காக்கும் விஜய்சேதுபதி:

சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த சித்த மருத்துவ மாநாட்டில் எடுத்தது அந்தப் புகைப்படம் எப்படியோ கசிந்து வைரலாகியிருக்கிறது. ஆனால் இவ்வளவு நடந்தும் விஜய் சேதுபதி இன்னும் வாய் திறக்காமல் இருப்பது தான் ஏன் எனத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X