தாமரை அக்கா உனக்கு வேணும்னா சொல்லு.. எனக்கு நான் ஃபேக்கா இருக்க மாட்டேன்.. கடைசி வரை சிபி சூப்பர்!
சென்னை: காலையில் பாடல் போடும் போதே சிபி மைண்ட் அப்செட்டாக இருந்த நிலையில், நடனம் ஆடாமல் அமைதியாக ஒரு மாதிரி இருந்தார்.
இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து சிபி ரூ. 12 லட்சம் பெட்டியுடன் வெளியேறி உள்ளார்.
நிகழ்ச்சி போடுவதற்கு முன்பே சிபி ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி விட்டன.

படையப்பா சிபி
பார்க்க மட்டும் அல்ல சிபியின் ரியல் கேரக்டரே படையப்பா ரஜினி போல தான். நேர்கொண்ட பார்வையாக ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கு தோன்றியதை தைரியமாக பேசி வந்த சிபி தன்னுடைய தன்னம்பிக்கை உடைந்து விட்டது என்பதையும் செம தில்லாக பேசி விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

ஏமாற்றிய அமீர்
இன்று யாருமே பணப்பெட்டியை எடுக்கவில்லை என்றால் நாம் அதை எடுத்துக் கொண்டு வெளியேறி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த சிபியிடம் ரூ. 11 லட்சம் வந்ததும் அமீர் அதனை எடுத்துக் கொள்ளப் போவதாக கூற ராஜுவை தவிர ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் நம்பியது. சிபி ஒருபடி மேல் சென்று எழுந்து சென்று அமீரை பாராட்ட அங்கே பாருங்க கேமரா நான் பிராங்க் பண்ணேன் என அமீர் சொன்னதும் சிபிக்கு உள்ளுக்குள் ஒரு வித சந்தோஷம்.

12 லட்சம் வந்ததும்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் புதிதாக டாஸ்க் கொடுத்தாலும் இவர்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை என நினைத்த பிக் பாஸ் டீம் இந்த வாரம் முழுக்கவே பணப்பெட்டியை வைத்தே ஓட்டி விட்டனர். ரூ. 12 லட்சம் வந்ததும் நான் எடுக்கப் போறேன் என வெளிப்படையாக சொல்லி பணப்பெட்டியை நோக்கி நகர்ந்தார் சிபி.

அக்கா உனக்கு வேணுமா
வெறுமனே பணத்தை தான் எடுத்துக் கொண்டு ஓடப் போகிறேன் என சொல்லாமல் தாமரை அக்கா உனக்கு வேண்டும் என்றால் சொல் நான் எடுக்கவில்லை. நீ எடுக்கவில்லை என்றால் நான் எடுக்கப் போகிறேன் என வெளிப்படையாக சிபி சொல்ல அனைவரும் ஷாக் ஆகினர்.

தாமரைக்கு ஆசையில்லை
கடன் பிரச்சனை இருக்கு என புலம்பிக் கொண்டிருந்த தாமரை இந்த பெட்டியை எடுத்துக் கொண்டு இப்போதே வெளியேறி விட வேண்டும் என நினைக்கவில்லை. கடைசி வரை என்ன தான் ஆகிறது பார்த்து விடலாம் என்கிற எண்ணத்துடன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தாலே போதும் என சொல்ல சிபி கடைசியாக பெட்டியை தூக்கி விட்டார்.

நிரூப்புக்கு சொன்னது
நிரூப்பை பார்த்து பயந்துட்ட என சொல்லி அசிங்கப்படுத்திய சிபி அதே கேள்வியை தன்னை பார்த்துக் கேட்டுக் கொண்டதாகவும் இதற்கு மேல் இந்த வீட்டில் இருந்தால் ஃபேக்காக இருப்பேன் என தோன்றியதால் இப்போ கிளம்புறேன் என அமீர், நிரூப், பாவனி உள்ளிட்டோருக்கு செம பல்பு கொடுத்து விட்டு பணப்பெட்டியுடன் எஸ்கேப் ஆகி விட்டார்.

நம்பாத ராஜு
சிபியும் நிச்சயம் அமீர் போல ஆக்டிங் பண்ணிட்டு உன்னோட நான் நல்ல நடிகன் டான்னு சொல்வான்னு தான் எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி போயிட்டானே என ராஜு புலம்பியதும் சிபி பிரிந்து சென்ற சோகத்தை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு பார்த்ததையும் ரசிகர்கள் நோட் பண்ணி கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











