தலைவர் 168.. ரஜினியின் ஹீரோயினாகும் கீர்த்திசுரேஷ்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்!
தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்திற்கு தலைவர் 168 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்த எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இமான் இசை
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளார். சிவாவின் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டானதால் இந்த கூட்டணி அமைந்துள்ளது. காமெடியனாக சூரி நடிக்க உள்ளார்.
கதாநாயகிகள்
தலைவர் 168 படத்தின் கதாநாயகிகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இவர்களை தவிர குஷ்பு, மீனா, சிம்ரன் ஆகிய மூவரில் ஒருவர் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தலைவர் 168ல் நடிப்பதை சமீபத்தில் மீனா சூசகமாக உறுதிசெய்தார்.

தலைவர் 168ல் கீர்த்தி சுரேஷ்
எனவே அவரது பெயர் தான் அடுத்ததாக வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகவே தெரிகிறது. அதன் காரணமாகவே அவரது பெயரை முதலில் அறிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

மகிழ்ச்சியில் கீர்த்தி
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி தெரிவிதுள்ளார். "ரஜினியின் மிகப்பெரிய ரசிகை நான். தலைவர் 168 படத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ரஜினி சார், சிறுத்தை சிவா சார், சன் பிக்சர்ஸ் எல்லோருக்கும் நன்றி", என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு
விரைவில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. தொடர்ந்து ஒரே கட்டமாக முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











