Don't Miss!
- News
வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தண்ணி ஊற்றி ஃபைனல்ஸ் போக வேண்டாம்.. ஒரு கோடி கொடுத்தாலும் தேவையில்லை.. தன்மானத் தலைவி தாமரை!
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தாமரை எவிக்ட் ஆன தகவல்கள் கசிந்த நிலையில், அந்த காட்சியை எபிசோடில் பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தன்மானத் தலைவி, சிங்கப்பெண் தாமரை என பிக் பாஸ் ரசிகர்கள் தாமரையை கொண்டாடி வருகின்றனர்.

முதல் வார தலைவி
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் முதல் வாரத்தில் பலூன் உடைக்கும் டாஸ்க்கில் அனைவரது பலூனை காட்டான் நிரூப் கண்டபடி உடைத்து வர அவருடைய பலூனை அசால்ட்டாக உடைத்து கடைசியில் சின்னபொண்ணுவின் பலூனையும் உடைத்து முதல் வாரத்திலேயே தன்னால் விளையாட முடியும் என்பதை நிரூபித்து முதல் வார தலைவியாக மாறியவர் தாமரை.

வெளியேறிய தாமரை
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முந்தைய வாரமான இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி எவிக்ட் ஆகி உள்ளார். நிரூப் தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நிரூப்பை செகண்ட் ஃபைனலிஸ்டாக மாற்றி தாமரையை வெளியேற்றி உள்ளனர்.

மூத்த மகன் ராஜு
தாமரை எவிக்ட் என கமல் அறிவித்த நிலையில், ராஜுவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த தாமரை மூத்த மகன் என சொன்னது ராஜுவை நெகிழ வைத்து விட்டது. தாமரை எவிக்ட் என்கிற அறிவிப்பு ராஜுவுக்கு பயங்கர ஷாக்கிங்காக அமைந்தது அவரது முகம் தெளிவாக காட்டிக் கொடுத்து விட்டது.

கோடி கொடுத்தாலும்
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசே ரூ. 50 லட்சம் தான் என்கிற நிலையில், கோடி ரூபாய் கொடுத்தாலும் வெளியே போகமாட்டேன் என சொன்னா தாமரை என பிரியங்கா தாமரையின் வெளியேற்றத்தால் மிகவும் வாடி நின்றார். இன்னும் ஒரு வாரத்துக்கு வாய்க்கு ருசியா சமைத்துப் போட ஆளில்லை என்கிற கவலையும் பிரியங்காவுக்கு இருக்கும்.

தன்மானத் தலைவி
தாமரை எவிக்ட் என சொன்ன நிலையில், நிரூப் மீது தான் அமீரின் மொத்த கோபமும் இருந்தது. தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஃபைனலிஸ்ட் ஆக போகவே மாட்டேன்னு கெத்தா சொன்னாங்கா தாமரை என அமீர் பேசியதை கேட்ட ரசிகர்கள் தன்மானத் தலைவி என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.