Nayanthara Wedding: கொட்டுடா மேளத்த.. பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

பிரம்மாண்டமாக நடைபெற்ற Nayanthara – Vignesh Shivan திருமணம்! #Celebrity | Filmibeat Tamil

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் அந்த படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அப்போதே காதல் மலர்ந்தது.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு தொடர்ந்து டேட்டிங் செய்து வந்தனர் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இருவரும் காதலிப்பதாக முதலில் கிசுகிசுக்கள் வெளியாகின. பின்னர், கன்ஃபார்ம் ஆனது. நெற்றிக்கண் படம் வெளியாவதற்கு முன்னதாக நயன்தாரா டிடி பேட்டியில் பேசும் போது இருவருக்கும் நிச்சயம் ஆகி விட்டது என விஷயத்தை போட்டுடைக்க இருவரும் எப்போதுதான் திருமணம் செய்வார்கள் என பலரும் காத்திருந்தனர்.

தாலி கட்டிய விக்னேஷ் சிவன்

தாலி கட்டிய விக்னேஷ் சிவன்

திருப்பதியில் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர் என உறுதியான தகவல் பரவிய நிலையில், கடைசி நேரத்தில் மகாபலிபுரத்தில் அதே தேதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி உள்ளார் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

சந்திரமுகியில் தொடங்கி தர்பார், அண்ணாத்த என ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் படங்களில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளார் என உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயனுக்கு ஜோடியாக நடித்த விஜய்சேதுபதி, டிடி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளதாக கூறுகின்றனர்.

பறந்து வந்த ஷாருக்கான்

பறந்து வந்த ஷாருக்கான்

மும்பையில் இருந்து சென்னைக்கு காலையில் விமானத்தின் மூலம் பறந்து வந்த நடிகர் ஷாருக்கான் தன்னுடன் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரத்துக்கு கார் மூலம் சென்ற காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

இன்னும் சற்று நேரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா என்ன மாதிரியான பட்டாடையில் மின்னப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளையாக மின்னப் போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X