என்னாது.. நடிகர் சங்க தேர்தல் ரத்தா...? அப்படியே ஷாக்கான பாக்யராஜ்!!
Recommended Video
சென்னை: நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் இரு அமைப்பினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதாக கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் இன்று உத்தரவிட்டது. மேலும், வாக்களிக்க தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளது என்றும் முதலில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த ஆண்டு உறுப்பினர் பட்டியலை வைத்து தேர்தல் நடத்துவது என்பதை ஆய்வு செய்ய பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக சுவாமி சங்கர்தாஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார். மேலும் தங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு இதுகுறித்து கருத்து தெரிவிப்பேன் எனவும் நடிகர் பாக்யராஜ் கூறினார்.
சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததால் தான், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் எனவும் பாக்யராஜ் கூறினார்.


Click it and Unblock the Notifications











