'இது ரொம்ப ரொம்ப மோசம் பிக் பாஸ்'.. தர்ஷனுடன் சோகமான புகைப்படம் வெளியிட்ட ரியல் காதலி சனம்..!

பிக் பாஸ் செய்தது நியாயமே இல்லை என தர்ஷனின் காதலி சனம் ஆதங்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : தர்ஷன் வெளியேற லாஸ் தான் காரணம்-வீடியோ

சென்னை: தர்ஷனை வெளியே அனுப்பியதை குறிப்பிட்டு, பிக் பாஸை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும் போதெல்லாம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பார் கமல்ஹாசன். அப்படி தான் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தர்ஷனை வெளியில் அனுப்பி அதிர்ச்சி கொடுத்தார்.

தர்ஷனை வெளியில் அனுப்பியதை தாங்கிக்கொள்ள முடியாத அவரது ரசிகர்கள், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். விஜய் டிவிக்கு எதிராக ஹேஷ்டேக் எல்லாம் போட்டு டிரெண்டாக்கினர்.

வீட்டுக்கு சென்ற தர்ஷன்

வீட்டுக்கு சென்ற தர்ஷன்

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷன் நேற்று முன்தினம் இரவே சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றுவிட்டார். அம்மா, தங்கை, காதலி, நண்பர்கள் என எல்லோரும் அவரை கட்டித்தழுவி நலம் விசாரித்தனர்.

தர்ஷனின் காதலி

தர்ஷனின் காதலி

இந்நிலையில் தர்ஷனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, பிக் பாஸ் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் அவரது காதலியான நடிகை சனம். தர்ஷனுக்கு நேர்ந்தது மிக மிக அநியாயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநியாயம் பிக் பாஸ்

அநியாயம் பிக் பாஸ்

இதுகுறித்து அவர், "உன்னை வருக வருக என வரவேற்பது இப்போது சரியாக இருக்காது தர்ஷன். நீ அங்கேயே இருந்து வெற்றி பெற வேண்டியவன். ஆனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லோரையும்விட நீ எல்லோர் மனதையும் வென்றிருக்கிறாய். இது ஒரு சோகமான புகைப்படம். மிக மிக அநியாயம் பிக் பாஸ். 98 நாட்கள் கழித்து உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி. பல்வேறு விதமான உணர்வுகளை தருகிறது", என கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் போட்டியாளர்களில் தர்ஷன் தான் நிகழ்ச்சியை வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டார். அதற்கு தகுந்த மாதிரி, எல்லா டாஸ்க்குகளிலும் அவர் சிறப்பாக விளையாடினார். பிக் பாஸ் வீட்டில் நேர்மையாக இருந்தவர் தர்ஷன். அவர் வெளியேறி இருப்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X