வயசு 19தான்.. இந்த வயதிலேயே கலக்கி வரும் நடிகை இவானா!

சென்னை: இவானாவை நாம் நாச்சியார் மற்றும் ஹீரோ படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பார்த்திருப்போம். கிட்டத்தட்ட 19 வயது ஆன பெண்ணான இவானா தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார் .

இவானா முதன் முதலில் மலையாளத்தில் மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்னால் இரு மலையாள படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த பின் தமிழில் பாலா இயக்கத்தில் உருவாகிய நாச்சியார் படத்தில் கிட்டதட்ட கதாநாயகியாக நடித்து இருந்தார்.

ivana rocks in 19 years

சிலருக்கு இவ்வாறு வாய்ப்பு எளிதில் கிடைத்து விடும், தமிழில் முதல் படமே இயக்குனர் பாலாவின் படம் .பாலா படத்தில் நடிக்கும் நடிகர்கள் படதயாரிப்பு முடிவதற்குள் ஒரு தேர்ந்த நடிகர்களாக ஆகி விடுவது வழக்கம்.

ஏனெனில் பாலா படங்களில் அவருக்கு கீழ் பணியாற்றும் நடிகர்களை மிக சரியான முறையில் பாலா நடிக்க வைத்து விடுவார்.அதுதான் அவரிடம் இருக்கும் திறமையும் கூட ,இதனாலே பல பாலா படங்கள் நாயகன் நாயகிகளுக்கு விருதுகளை வாரி குவித்து தருகிறது .

இவானா நாச்சியார் படத்தில் சரியாக நடித்து இருப்பார். முக்கியமாக படத்தின் இறுதி காட்சியில் ஜீ.வி.பிரகாஷ் இவானாவிடம் பேசும் காட்சி, இவானா பிரசவித்த பின் வரும் காட்சிகள் என படத்தில் அசத்தி இருப்பார் இவானா.

ivana rocks in 19 years

இவானாவின் மலையாள படத்திற்கும் நாச்சியார் படத்திற்கும் நடுவில் நல்ல வேறுபாடுகள் இருக்கும் .அந்த படங்களை விட இவானா தமிழில் நன்கு நடித்திருப்பார். அதற்கு பின் தற்போது வெளிவந்து இருக்கும் ஹீரோ படத்திலும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நன்கு நடித்து இருந்தார் இவானா.

19வயதாகிய இவானாவை யாரும் சின்னபொண்ணு என்று கூற மாட்டார்கள் நடித்த சில படங்களிலே நடிப்பில் நன்கு தேறி இருக்கிறார்.இவானா தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார் .வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சமூக வலைத்தளம் தற்போதைய சூழலில் மிக அவசியம் அதை உணர்ந்து தனது போட்டோசூட் மற்றும் நிகழ்வுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் இவானா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X