இந்தியில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோஷியும்.. மோதப் போவது யார் தெரியுமா?
சென்னை : தெலுங்கை தொடர்ந்து இப்பொழுது ஹிந்தியிலும் ஐயப்பனும் கோஷியும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
மலையாளத்தில் வெளியான இந்த படத்திற்கு இப்பொழுது பல மொழிகளிலிருந்தும் டிமெண்ட் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழிலும் இந்த படம் உருவாகிறது என பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வர தற்போது ஹிந்தியில் பிரபல நடிகர்கள் இருவரும் இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது.

மிரட்டலான நடிப்பை
மலையாள இயக்குனர் சாச்சியின் இயக்கத்தில் உருவான ஐயப்பனும் கோஷியும் மலையாள ரசிகர்களை தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களையும் மொழிகளைத் தாண்டி கவர்ந்தது. இதில் நடிகர் பிருத்விராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் பிஜுமேனன் போலீஸ் அதிகாரியாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

தெலுங்கு ரீமேக்கில் ஒப்பந்தம்
மலையாளத்தைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாக தமிழில் இதை யார் இயக்கப் போகிறார் எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், தெலுங்கில் இதன் ரீமேக் பணிகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது அதில் ராணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் நடித்து வருகின்றனர். கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோரும் தெலுங்கு ரீமேக்கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜான் ஆபிரகாம்
இந்நிலையில் ஐயப்பனும் கோஷியும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட அதில் நடிகர்கள் அபிஷேக் பச்சன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஷன் மங்கள்யான் படத்தை இயக்கிய இயக்குனர் ஜெகன் சக்தி இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலையில் படப்பிடிப்பு
பாலிவுட்டில் சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் அதிக அளவில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் பெரும் பொருட்செலவு எதுவுமில்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான ஐயப்பனும் கோஷியும் இந்தியில் தற்போது உருவாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு வரும் ஜூலை மாதத்தில் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. மேலும் இதில் கதாநாயகிகளாக யார் நடிப்பார்கள் என்பது பற்றியும் மிக விரைவில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











