அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட இயற்கை பட நடிகை.. பல ஆண்டுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
சென்னை: சினிமாவில் வண்ண விளக்கிற்கு மத்தியில் பிரகாசமாக ஜொலிக்கும் நடிகைகளின் வாழ்க்கை பெரும்பாலும் சோகம் நிறைந்ததாகவே இருக்கிறது.
பிரபலம் என்பதால் வெளிப்படையாக எதையும் பேசமுடியாமல், பல மன வலிகளையும், வேதனையையும் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றனர்.
அப்படி பல வலிகளை மனதிற்குள் வைத்து மறைத்துக்கொண்ட நடிகை தான் குட்டி ராதிகா.

குட்டி ராதிகா: காதல் வந்தால் சொல்லி அனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன் என்ற பாடலை எப்படி நம்மால் மறக்க முடியாதோ. அதே போல இயற்கை படத்தில் க்யூட்டாக நடித்த குட்டி ராதிகாவையும் மறக்க முடியாது. 2003ம் ஆண்டு ஷாம் நடித்த இப்படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடியது.
நீல மேக சியாமா: கர்நாடகா மாநிலத்தில் பிறந்த குட்டி ராதிகா, ஒன்பதாவது படித்துக் கொண்டு இருக்கும் போதே, நீல மேக சியாமா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தைத் தொடர்ந்து கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்த குட்டி ராதிகா, தமிழில் வர்ணஜாலம், மீசை மாதவன், உள்ளக்காதல் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இயற்கை படத்திற்கு பின் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த குட்டி ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் கணவர் இறந்தார்: இதையடுத்து, 2000ம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 2002ம் ஆண்டு ரத்தன் குமார் திடீரென இறந்தார். இவரின் மரணம் குறித்து குட்டி ராதிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரகசிய திருமணம்: அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய குட்டி ராதிகா, சினிமாவிலும் பொது இடத்திலும் தலைகாட்டாமல் இருந்தார். திடீரென ஒரு நாள் குழந்தையும் கையுமாக வந்து, அப்போது கன்னட முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கும் தனக்கும் 2006ம் ஆண்டு திருமணமாகிவிட்டதாகவும் தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், திருமண விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்பதால், இத்தனை ஆண்டு வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். குட்டி ராதிகா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications