Don't Miss!
- Finance
உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்படலாம்.. சவுதி அராம்கோ CEO எச்சரிக்கை.. ஏன் தெரியுமா?
- Lifestyle
இரவு நேரத்தில் மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க..
- Automobiles
22 நாளில் 22 ஆயிரம் பேர் சிக்கினர்... தமிழக போலீஸ் திடீர் அதிரடி... இனி இந்த தப்பை செய்தால் அவ்ளோதான்!
- News
நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்? கொதித்தெழுந்த சித்தராமையா
- Technology
இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..
- Sports
ஐபிஎல் பிளே ஆஃப்- இன்றைய ஆட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்.. முடிவையே மாற்றும் திறமையாளர்கள்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் இசைவாணியுடன் குத்தாட்டம் போட்ட ஐக்கி பெர்ரி.. வேறலெவல் வீடியோ!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இன்னொரு ஓவியாவாக முயற்சி செய்த ஐக்கி பெர்ரி பிக் பாஸ் வீட்டில் இருந்து 56வது நாளில் எலிமினேட் ஆனார்.
பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலேவில் க்யூட்டான பார்பி டால் போல உடை அணிந்து வந்திருக்கும் ஐக்கி பெர்ரி இசைவாணியுடன் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஐக்கி பெர்ரி மற்றும் இசைவாணி நடனமாடும் அந்த வீடியோவில் தாமரைச் செல்வியும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே... அடி தூள் சிறப்பு விருந்தினர் இவரா ?

பிக் டே
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்னதான் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விட்டாலும், அந்த தருணத்தை டிவியில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 105 நாட்கள் எந்தவொரு வெளியுலக தொடர்பும் இல்லாமல் பல சவால்களை சந்தித்து வந்த போட்டியாளர்களுக்கு இன்றைய நாள் நிச்சயம் ஒரு பிக் டேவாகவே இருக்கும்.

கசியும் புகைப்படங்கள்
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு என்றும் பிக் பாஸ் ரன்னர் அப் பிரியங்கா என்றும் நேற்றே வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்புகள் கசிந்து விட்ட நிலையில், காலை முதலே ராஜு கோப்பையுடன் இருக்கும் புகைப்படம், நிரூப் ராஜுவின் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம், அமீர் கேரவனில் அஷ்ரப் உடன் இருக்கும் புகைப்படம் என ஏகப்பட்ட புகைப்படங்கள் கசிந்து வைரலாகி வருகின்றன.

பார்பி பொம்மை போல
மஞ்சள் நிற டாப்ஸ் மற்றும் சிகப்பு நிற கவுன் அணிந்து கொண்டு பார்பி பொம்மை போல மாறி உள்ளார் தஞ்சாவூர் தமிழச்சி ராப் இசைக் கலைஞர் ஐக்கி பெர்ரி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் ஹேட்டர்களை சம்பாதிக்காமல் 56 நாட்கள் அசத்தல் பர்ஃபார்மன்ஸை கொடுத்து விட்டு சென்றவர் ஐக்கி பெர்ரி.

இசையுடன் ஆட்டம் போட்ட ஐக்கி
இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளரான ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே அரங்கத்தில் இருந்து கொண்டு இசைவாணி உடன் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். இசை மற்றும் ஐக்கியை மீண்டும் பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

வீடியோவில் தாமரை
கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு கலக்கலாக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்ட தாமரைச் செல்வியும் இந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பதை பார்த்த தாமரை ரசிகர்கள் டாப் 5 லிஸ்ட்டில் தாமரையும் இருந்திருக்க வேண்டும் என இப்போதும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.