எனக்கு என்னமோ ஐக்கி பெர்ரி பேசுறது கேட்டா ஒவியா பேசுற மாதிரியே தெரியுது.. ரசிகர்கள் ரகளை!

சென்னை: சனிக்கிழமை எபிசோடிலேயே ஐக்கி பெர்ரி சேவ் செய்யப்பட்ட நிலையில், இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்து விட்டு ஐக்கி பெர்ரியின் பேச்சுக்கு ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளனர்.

பிரியங்கா அக்‌ஷரா விஷயத்தில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருவதால் அவரை எதிர்த்து ஐக்கி மறைமுக அட்டாக் செய்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சில ரசிகர்கள் ஐக்கி பெர்ரியின் ஓப்பன் டாக்கை ஓவியாவுடன் கம்பேர் செய்து அவருக்கான பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழச்சி

தஞ்சாவூர் தமிழச்சி

மருத்துவர் மற்றும் ராப் இசை கலைஞரான தஞ்சாவூரை சேர்ந்த தமிழச்சி ஐக்கி பெர்ரி பார்க்க இங்கிலிஷ்காரி மாதிரி இருந்தாலும் பக்காவாக தமிழ் பேசி அதிலும் மனசுக்கு பட்டதை உண்மையாக பேசி லைக்குகளை அள்ளி வருகிறார். இந்த சீசனில் இருந்து முதல் வாரமே ஐக்கி வெளியேறிவிடுவார் என சிலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ஐக்கி பெர்ரி டஃப் போட்டியாளராக மாறி வருகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொளுத்தி போடுறாங்க

கொளுத்தி போடுறாங்க

பிரியங்கா நிறையா விசயங்களை காமெடியா சொல்லி கொளுத்தி போட்டுட்டு போயிடுறாங்க என ஐக்கி பெர்ரி சொன்னதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் #IykkiBerry என்னமா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட என கேட்டும் இது ஓரு விதத்துல கரெக்ட் தான் என்றும் ஐக்கிக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

கருப்பு குதிரைகள்

கருப்பு குதிரைகள்

ஐக்கி பெர்ரி ரொம்பவே கூலாக இருந்து வருகிறார். தேவையில்லாத எந்த சர்ச்சையிலும் இதுவரை சிக்கவில்லை. வரும் வாரங்களில் ஐக்கி பெர்ரி மற்றும் சுருதி ஆகிய இரு கருப்பு குதிரைகளும் பல சர்ப்ரைஸ்களை கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என இந்த நெட்டிசன் கமெண்ட் அடித்துள்ளார்.

நிறைய எதிர்பார்க்கிறோம்

நிறைய எதிர்பார்க்கிறோம்

இந்த பொண்ணுக்கிட்ட இருந்து வரும் வாரங்களில் நிறைய எதிர்பார்க்கிறோம் என ஐக்கி பெர்ரியின் வெளிப்படையான பேச்சு பிடித்துப் போன ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

வெளிய அனுப்பிடாதீங்க

வெளிய அனுப்பிடாதீங்க

அபிஷேக் ராஜாவை மட்டும் சீக்கிரம் வெளியே அனுப்பிடாதீங்க விஜய் டிவி.. ஆரம்பத்துல இவர் பேசுறத கேட்க கடுப்பா இருந்தாலும், இவர வச்சி வர மீமெல்லாம் ஸ்ட்ரெஸ்பஸ்டரா இருக்கு என இந்த பிக் பாஸ் ரசிகை விஜய் டிவியிடம் கோரிக்கை எல்லாம் வச்சு அபிஷேக்கை கலாய்த்துத் தள்ளி உள்ளார்.

ஓவியா பேசுற மாதிரி

ஓவியா பேசுற மாதிரி

"எனக்கு என்னமோ #ஐக்கிபெர்ரி பேசுறது கேட்டா #ஒவியா பேசுற மாதிரியே தெரியுது.. உங்களுக்கும் அப்படி இருந்தால் லைக் பண்ணுங்க.." என இந்த நெட்டிசன் கொஞ்சம் ஓவரா போய் ஓவியா உடனே ஐக்கி பெர்ரியை கம்பேர் செய்துள்ளார். பார்க்கலாம் இவருக்கு எத்தனை நாட்களை விஜய் டிவி ஒதுக்கி இருக்காங்கனு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X