அவசரப்பட்ட நிரூப்.. அதிகாரப்பூர்வமாக பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது ஐக்கி பெர்ரி தான்.
தமிழ் ராப் பாடகர் மற்றும் காஸ்மெடிக் சர்ஜெரியான ஐக்கி பெர்ரி பிக் பாஸ் வீட்டில் 56 நாட்கள் தாக்குப் பிடித்து இருந்த நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.
ஜெர்மனி மாடல் மது போலவே இவர் மீதும் பெரிய வெறுப்புகள் மக்கள் மத்தியில் இல்லாத நிலையிலும் இவர் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்.

எவிக்ஷன் சுவாரஸ்யம்
சனிக்கிழமையே ஷூட் முடிந்ததும் யார் இந்த வாரம் வெளியேறினார் என்பது கசிந்து விடுகிறது. ஆனாலும், ஞாயிற்றுக் கிழமை அதிகாரப்பூர்வமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்த பிறகு தான் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த வாரம் யார் வெளியேறினார் எப்படி வெளியேறினார். இறுதியாக யார் யார் இருந்தார்கள். போகும் போது என்ன நடந்தது என்பதை பார்ப்பதிலேயே தனி சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.

அதிகாரப்பூர்வ வெளியேற்றம்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐக்கி பெர்ரி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். குறைவான ஓட்டுக்களை மக்கள் அவருக்கு போட்டு அவரை வெளியேற்றி விட்டதாக ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக தனது முதல் எவிக்ஷனை இந்த வாரம் நடத்தி உள்ளார்.

அவசரப்பட்ட நிரூப்
ஐக்கி பெர்ரி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே அளவு எடுத்து செய்தவர் என அனைத்து ஹவுஸ்மேட்களாலும் சொல்லப்படும் யாஷிகா ஆனந்தின் எக்ஸ் பாய் பிரண்ட் நிரூப் கடந்த சில வாரங்களாக அபிநய் இடத்தை பிடித்துக் கொண்டு விளிம்பு நிலையில் எப்போ வேணா வெளியே போகலாம் என்பது போல் தொங்கி வருகிறார். கடைசியாக ஐக்கி மற்றும் நிரூப் இருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் சொல்வதற்கு முன்பாகவே நான் தான் மேம்.. இந்த வாரம் வெளியே போகிறேன் என ரொம்பவே அவசரப்பட்டு அதன் பின்னர் சிபியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ராப் பாடிய ஐக்கி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கி பெர்ரி ஹவுஸ்மேட்கள் முன்னிலையிலும் ரம்யா கிருஷ்ணன் முன்னிலையிலும் ராப் பாடலை பாடி அசத்தினார். கடந்த சீசனில் பிக் பாஸ் வீடே ஆஜித்தின் இசை மழையில் அடிக்கடி நனைந்து இருந்த நிலையில், இந்த சீசனில் சின்ன பொண்ணு, இசைவாணி, ஐக்கி பெர்ரி என பல பாடகர்கள் இடம்பெற்றும் ரசிகர்கள் பெரிதாக நல்ல இசையை கேட்டு ரசிக்க வில்லை என்று தான் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











