நிஜ கபடி வீரர்கள் நடிக்கும்.. ‘தோனி கபடிக்குழு’

தோனி கபடிக் குழு படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : கிரிக்கெட் மற்றும் கபடியை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வரும் 'தோனி கபடிக் குழு' படத்தின் போஸ்டர், கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடன் துணை இயக்குனராக பணியாற்றிய ஐய்யப்பன் இயக்குநராக அறிமுகமாகும் படம் தோனி கபடிக் குழு. கபடி மற்றும் கிரிக்கெட் என இரண்டு வெவ்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த இரண்டு கதாநாயகர்களின் இடையே நகரும் கதை என்பதை படத்தலைப்பே சொல்கிறது.

Iyyappan’s Dhoni Kabadi Kuzhu

இப்படத்தில் 'மைடியர் பூதம்' தொடரில் நடித்த அபிலாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே "நாகேஷ் திரையரங்கம்" படத்தில் வில்லனாக நடித்தவர். மேலும் படத்தில் தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், பிரபாகரன்,ரிஷி, நவீன் சங்கர், சுஜின்,பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ கபடி விளையாட்டு வீரர்கள் சிலரும் நடிக்கின்றனர். "பட்டம் போலே" படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார்.

கதை,திரைக்கதை மற்றும் வசனத்தை ஐயப்பன் எழுதியுள்ளார். இசை ரோஷன் ஜோசப், பின்னனி இசை மகேந்திரன். இப்படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2018 அன்று வெளியாக உள்ளது. நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளான இன்று, இப்படத்தின் டைட்டில் மற்றும் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படபிடிப்பு விழுப்புரம்,கல்லகுறுச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X