அரசியல் மட்டுமல்ல சினிமாவிலும் தடம் பதித்த ஜெ அன்பழகன்.. ஜெயம் ரவியின் படத்தை தயாரித்திருக்கிறார்!
சென்னை: மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் திரைப்படத் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர்.
Recommended Video
திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் இன்று காலை 8 மணியளவில் காலமானார். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ அன்பழகன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தது. செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் இன்று காலை பிரிந்துள்ளது.
விளையாட்டு... சினிமா... அரசியல்... அனைத்திலும் அப்டேட்டாக இருந்தவர் அன்பழகன்

திரைப்படத்துறை
மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அன்பழகன் திமுக கட்சிப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார். அவரது மறைவுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 62 வயதான ஜெ அன்பழகன் அரசியல்வாதியாக மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் தடம் பதித்தார்.

ஆதி பகவன்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் வலம் வந்தார். அன்பு பிக்ஸர்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்த அவர் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்து வந்தார். அமீர் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோர் நடித்த ஆதி பகவன் என்ற படத்தை தயாரித்தார்.

யாருடா மகேஷ்
மேலும் சந்தீப் கிஷன், டிம்பிள் சாப்டே ஆகியோர் நடித்த யாருடா மகேஷ் என்ற படத்தின் விநியோகஸ்தராகவும் இருந்தார். அதோடு நடிகர் விஜயின் தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, அந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய தயார் என துணிச்சலாக கூறினார்.

திரைத்துறை அதிர்ச்சி
இந்நிலையில் அவர் மரணமடைந்த நிகழ்வு அரசியல் பிரமுகர்கள், திமுக தொண்டர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உடல் நோய்த்தொற்று சட்டப்பிரிவின் படி சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











