ஜே பேபி முதல் சிங்கப்பெண்ணே வரை.. தியேட்டரில் இன்று வெளியாகும் படங்கள்!
சென்னை: சர்வதேச மகளிர் தினம், மகா சிவராத்திரி, சினிமா பிரியர்களுக்கு பிடித்தமான வெள்ளிக்கிழமை என அடுத்தடுத்து சிறப்புகளை பெற்ற இந்த நாளில் பலத் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தியேட்டர் மட்டுமில்லாமல் ஓடிடியிலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படமும், விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் இன்று வெளியாக இருக்கிறது.
ஜே பேபி: இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அட்டக்கத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன், கவிதா பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது 'ஜே பேபி' படம். டோனி பிரிட்டோ என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.

கார்டியன்: மார்ச் 8 ம் தேதியான இன்று நடிகை ஹன்சிகா நடித்துள்ள கார்டியன் திரைப்படம் வெளியாக உள்ளது. கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய சபரி, குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். கார்டியன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். அவருடன் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் படங்களை இயக்கிய விஜய்சந்தர் கார்டியனை தயாரித்துள்ளார். சாம் சி.எஸ். படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சிங்கப்பெண்ணே: தமிழ் பெண்ணின் சாதனை பற்றி பேசும் படமான இத்திரைப்படம் சிங்கப்பெண்ணே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாக உள்ளது. நீச்சல் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் ஆர்த்தி என்ற பெண் இப்படத்தில் நீச்சல் வீராங்கனையாக நடிக்கிறார். படத்தை சதீஷ் இயக்கி தயாரித்துள்ள இப்படத்தில், ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே: இயக்குநர் பிரசாத் ராமர் இயக்கத்தில் இன்று தியேட்டரில் வெளியாக உள்ள திரைப்படம் தான் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. இன்றைய காலத்து இளைஞர்களின் வாழ்க்கை முறையைவைத்து உருவாகி உள்ள இப்படத்தில், ப்ரீத்தி கரன், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி, ஷிவானி கீர்த்தி என புதுமுகங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
உணர்வுகள் தொடர்கதை: இயக்குநர் பாலு ஷர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் உணர்வுகள் தொடர்கதை. காதல் மற்றும் ரொமான்டிக் கதையைக் கொண்ட இப்படத்தில், ஹிருஷிகேஷ் மற்றும் ஷெர்லின் சேத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.

ஷைத்தான்(இந்தி): அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தி திரைப்படம் ஷைத்தான். அஜய் தேவ்கன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். பயம், பதற்றம், அச்சம், திகில் உணர்வுகளை கடத்தும் திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இன்று தி யேட்டரில் வெளியாக உள்ளது. சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜோதிகா நடித்து இருப்பதால் தமிழ் நாட்டிலும் இப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











