போரடித்த அரசியல்… மீண்டும் சினிமாவுக்கே திரும்பிய ஜே.கே.ரித்தீஷ்

By Mayura Akilan

நடித்தது மூன்றுபடங்கள்தான் ஆனால் 30 படங்களில் நடித்தது போல பில்டப் கொடுத்தார் முகவை குமார். அதுயார் முகவை குமார் என்கிறீர்களா அவர்தான் ஜே.கே.ரித்தீஷ்.

சில வருடங்களுக்கு முன் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் என மூன்று படங்களில் நடித்து கோடம்பாக்கத்தையே திரும்பிப்பார்க்க வைத்தவர்தான் ஜே.கே.ரித்தீஷ்.

யார் கேட்டாலும் பணத்தை அள்ளி இறைத்தார். தானம் கேட்டால் லட்சக்கணக்கில் கொடுத்து கலியுக வள்ளல் என்று பெயரெடுத்த ரித்தீஷ், திடீரென திமுகவில் சேர்ந்து லோக்சபா எம்.பியானார்.

சமீபத்தில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் ரித்தீஷ். எனவே மீண்டும் சினிமா பக்கம் வர முடிவு செய்துவிட்டார் ரித்தீஷ்.

பவர் ஸ்டாருக்கு அண்ணன்

பவர் ஸ்டாருக்கு அண்ணன்

தமிழ் சினிமாவில் பவர் ஸ்டாருக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கியவர்தான் ஜே.கே.ரித்தீஷ்! கானல் நீர் என்ற படத்தை தயாரித்து ஹீரோவானார்.

நாயகன்

நாயகன்

நாயகன் என்ற படத்தை தயாரித்து ஸோலோ ஹீரோவானார். அதுவரை ஜே.கே.ரித்தீஷ் என்றால் எவருக்குமே தெரியாது. பிச்சைக்காரனுக்கு பத்தாயிரம், நடிகர் சங்கம் உட்பட திரைப்படத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் லட்சக்கணக்கில் நன்கொடை என பணத்தை வாரி இறைத்தார்.

கூடவே செக்யூரிட்டி

கூடவே செக்யூரிட்டி

ஏகப்பட்ட செலவு செய்து தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை ஏற்படுத்தினார். கருப்பு சஃபாரி போட்ட பவுன்சர்களையும் தன் பின்னால் நிற்க வைத்தார்.

அரசியல்வாதியான ரித்தீஷ்

அரசியல்வாதியான ரித்தீஷ்

ஏறக்குறைய ஒரு வருடத்துக்குள் திரையுலகில் முக்கியமான பிரமுகராக உருவெடுத்த ரித்தீஷ், பெரும்தொகையை செலவு செய்து தி.மு.க.வில் எம்.பி. தேர்தலில் சீட் வாங்கி ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். உடனே சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு போனார்.

மீண்டும் சினிமா

மீண்டும் சினிமா

திமுகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய ரித்தீஷ் பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமா பக்கம் வந்திருக்கிறார். இம்முறை விநியோகஸ்தராக களம் இறங்கியுள்ளார்.

குற்றாலம்

குற்றாலம்

ஜே.எம்.ஆரூணின் உதவியாளராக இருந்து தற்போது வாலி என்று பெயரை மாற்றிக் கொண்டு குற்றாலம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வாலி நடித்துள்ள குற்றாலம் படம் பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார் ஜே.கே.ரித்தீஷ்!

தனி ஹீரோவாகிறார்

தனி ஹீரோவாகிறார்

மீண்டும் தனி ஹீரோவாக தான் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் ஜே.கே.ரித்தீஷ். ஏற்கனவே இங்கே பவர்ஸ்டார், சோலார் ஸ்டாரெல்லாம் நிறைய இருக்காங்க. இந்த போட்டியை எப்படி சமாளிக்கப் போகிறாரோ ரித்தீஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X