பக்கத்து ஸ்டேட்லலாம் பயமே இல்லை.. குட் பேட் அக்லி வசூலுக்கு வேட்டு வைக்க இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதே!

சென்னை: அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. தமிழ்நாட்டில் தல வந்தா தள்ளி தான் போகணும் என மற்ற படங்கள் வெளியாகாமல் உள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் பல படங்கள் நாளை வரிசைக் கட்டி வெளியாகின்றன. ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய விடுமுறை இருந்தும் தமிழில் பெரிதாக போட்டியில்லை.

மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் குட் பேட் அக்லி வசூலுக்கு வேட்டு வைக்கும் வகையில் நாளை வரிசை கட்டி பல படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றன. குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலே இன்னொரு படம் நாளை வெளியாவது தான் அதிர்ச்சியின் உச்சம் என்கின்றனர்.

Jaat Maranamass and Alappuzha Gymkhana will ready to clash with Good Bad Ugly tommorrow at Box Office

குட் பேட் அக்லி படத்துக்கு பான் இந்தியா அளவில் வசூல் குவிய வாய்ப்பே இல்லை என்றும் தமிழ்நாட்டில் மட்டும் நல்ல ஓபனிங் இருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. குட் பேட் அக்லி படத்துக்குப் போட்டியாக நாளை என்னவெல்லாம் படங்கள் வெளியாகப் போகின்றன என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

சன்னி தியோலின் ஜாட்: கடார் 2 படத்தின் மூலம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்த பாபி தியோலின் அண்ணன் சன்னி தியோல் நடித்துள்ள ஜாட் திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். இந்தி மற்றும் ஆந்திராவில் மிகப்பெரியளவில் வசூல் வேட்டையை ஜாட் நிகழ்த்தும் என தெரிகிறது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் கூட குட் பேட் அக்லி வசூல் வேட்டை நடத்துவது கஷ்டம் தான் என்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்பது தான் அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

Jaat Maranamass and Alappuzha Gymkhana will ready to clash with Good Bad Ugly tommorrow at Box Office

மம்மூட்டியின் பஸூகா: டீனோ டென்னிஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள பஸூகா திரைப்படமும் நாளை வெளியாகிறது. மலையாளத்தில் ஏப்ரல் 10ம் தேதியை குறிவைத்து மூன்று பெரிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், கேரளா தியேட்டர்களுக்கு தெறி கொண்டாட்டம் என்கின்றனர்.

மரண மாஸ்: மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்கும் படங்களுக்கு இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். சிவ பிரசாத் இயக்கத்தில் பசில் ஜோசப் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது. தலையில் கலரெல்லாம் அடித்துக் கொண்டு மின்னல் முரளி இயக்குநர் புதுவிதமான கெட்டப்பில் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படம் கேரளாவில் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலப்புழா ஜிம்கானா: பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசப்படுத்திய மலையாள திரையுலகின் இளம் நடிகர் நஸ்லென் நடிப்பில் உருவாகியுள்ள ஆலப்புழா ஜிம்கானா படமும் ஏப்ரல் 10 ரிலீஸ் தேதியை குறிவைத்துள்ளது. அந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், கேரளாவில் மரண மாஸ் மற்றும் ஆலப்புழா ஜிம்கானா மற்றும் பஸூகா படங்களுக்கு இடையே வசூலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கேயும் குட் பேட் அக்லி படத்துக்கு சிக்கல் தான் என்கின்றனர்.

தொடர் விடுமுறை இருக்கு: மற்ற மாநிலங்களில் குட் பேட் அக்லி படம் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸில் அஜித் குமார் படம் நின்னு பேசும் என்கின்றனர். பக்கா கமர்ஷியல் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளதால் குட் பேட் அக்லி அஜித்தின் வாழ்நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக மாறும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X