நான் நல்லாருக்கேன், நல்லாருக்கேன்... கொரானா பாதிப்பு எனக்கில்லை... ரசிகர்களுக்கு ஜாக்கிசான் நன்றி
ஹாங்காங்: கொரோனா வைரஸ் பாதிப்பு தனக்கு இல்லை என்றும் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் பிரபல நடிகர் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவி உள்ளது.
தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ்
ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளன. இருந்த போதிலும், இதன் பாதிப்பு காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பலி எண்ணிக்கை
இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,912 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,026 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே பிரபல நடிகர் ஜாக்கி சானும் இந்த வைரஸில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவின.

நடிகர் ஜாக்கிசான்
இதுபற்றி ஹாங்காங் இணையதளங்களில் செய்திகள் வெளியாயின. இதையடுத்து அவரது ரசிகர்கள் அவர் உடல்நலம் குறித்து கவலை கொண்டனர். சில அன்புகொண்ட ரசிகர்கள் அவருக்கு பேஸ்மாஸ்குகளை ஏராளமான அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நடிகர் ஜாக்கிசான் தன் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பாக
இதுபற்றி அவர், 'என் உடல் நலம் குறித்து விசாரித்த உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நன்றி. எனது நண்பர்களிடம் இருந்தும் என் உடல் நலம் பற்றி பல மெசேஜ்கள் வந்துள்லன. நான் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. நான் தனிமைப்படுத்தப்படவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











