உலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்! - ஜாக்கி சான்
சினிமாவில் தனக்குப் பிடித்ததே இந்திப் பாடல்களும் நடனங்களும்தான் என்று ஜாக்கி சான் கூறியுள்ளார்.
தனது சமீபத்திய படமான குங்பூ பாண்டா-வை விளம்பரம் செய்ய இந்தியாவுக்கு வந்திருக்கும் ஜாக்கி சான், செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்னுடைய 16 வயதிலிருந்து பாலிவுட் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். எனக்கு இந்தி மொழி புரியாது. நடனங்கள் கொண்ட பாடல் காட்சிகளைப் பார்த்தபிறகு வெளியேறிவிடுவேன். இந்திப் படங்களில் நடனங்கள் மிக அற்புதமாக உள்ளன. பாலிவுட் படங்களின் நடனங்களை உலகிலேயே சிறந்தவை என்று சொல்வேன்.

ஆரம்பத்தில் பாலிவுட் மற்றும் சீனப் படங்களில் நடனங்கள் அந்தளவுக்கு இருக்காது. இப்போது பணமும் தொழில்நுட்பமும் பெருகிவிட்டன. அதனால் மக்களுக்கு நம்மால் பயிற்சி அளிக்கமுடியும். சமீபகாலமாக ஆசியாவில் மிகச்சிறந்த படங்களை எடுத்துவருகிறது பாலிவுட்," என்றார்


Click it and Unblock the Notifications











