அர்னால்ட் கூத்து முடிந்தது... அடுத்து ஜாக்கி சானாம்.. என்ன காமெடி பண்ணப் போறாங்களோ!
ஐ படத்தின் தெலுங்கு ஆடியோவை ஜாக்கி சானை வைத்து வெளியிடப் போகிறாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
ஐ தமிழுக்கு இணையாக தெலுங்குப் பதிப்பையும் வெளியிடத் திட்டமிட்டுள்ள ரவிச்சந்திரன் அதற்கான வேலைகளில் மும்முரமாக உள்ளாராம்.

அர்னால்ட்
அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் சென்னைக்கு வந்து ஐயின் தமிழ் ஆடியோ விழாவில் பங்கேற்றதும், இவர்கள் அடித்த கூத்தைப் பார்த்து வெறுத்துப் போய் சொல்லாமல் கொள்ளாமல் பாதியிலேயே வெளியேறியதும் இன்னும் மீடியாவில் கதை கதையாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஜாக்கி சான்
இந்த நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு இசையை ஜாக்கி சானை வைத்து வெளியிடும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறாராம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்.

அக்டோபர் 2
அவருக்கு நேரிலேயே போய் அழைப்பிதழ் வைத்துள்ளார்களாம். வரும் அக்டோபர் 2-ம் தேதி ஹைதராபாதில் நடக்கிறது இந்த விழா.

ரூ 30 கோடி
ஐ - படத்தின் தெலுங்கு மொழி உரிமை மட்டும் ரூ 30 கோடிக்கு விலை போயுள்ளதாம்.
ஜாக்கி சானை வைத்துக் கொண்டு என்னென்ன காமெடி செய்யப் போகிறார்களோ!


Click it and Unblock the Notifications











