31 வயது பள்ளி ஆசிரியையை மணந்த ஜாக்கி சானின் 19 வயது மகள்
Recommended Video

ஹாங்காங்: பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா தனது காதலியை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கும், மிஸ் ஆசியா அழகிப் பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர் எட்டா(19). எட்டா ஆசிரியையாக பணியாற்றிய கனடாவை சேர்ந்த ஆன்டி ஆட்டம்(31) என்ற பெண்ணை காதலித்தார்.
ஒரு கட்டத்தில் தனது காதலியுடன் மாயமானார்.
மனைவி
எட்டா தனது காதலி ஆன்டி(Andy)யை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். அதை ஆன்டி இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். மனைவி மற்றும் மனைவியாக ஹாங்காங்கிற்கு வந்துவிட்டதாக ஆன்டி தெரிவித்துள்ளார். ஹாங்காங் விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களை ஜோடியாக பலர் பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சான்றிதழ்
எட்டா தனது காதலியை கடந்த 8ம் தேதி திருமணம் செய்துள்ளார். திருமண சான்றிதழை வெளியிட்டு எட்டா தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார். உண்மை காதலை கண்டுபிடிப்பதை விட வேறு எதுவும் சிறந்தது அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார்.

புகார்
முன்னதாக எட்டாவை காணவில்லை என்று அவரின் தாய் தான் கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு தான் ஆன்டியுடன் பணம் இல்லாமல் ஹாங்காங்கில் தெருவோரம் வசிப்பதாக எட்டா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதை பார்த்த அவரின் தாய் எட்டா சொந்தமாக சம்பாதிக்க வேண்டுமே தவிர நான் பிரபலத்தின் மகள் என்று கூறி உதவியை எதிர்பார்ப்பது சரி அல்ல என்று தெரிவித்தார்.

ஆசிரியை
எட்டா ஆசிரியையான ஆன்டி மீது காதல் வயப்பட்டதால் தனது பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். மாணவியின் படிப்பு பாதிக்க ஆன்டி காரணமாகியுள்ளார். எட்டாவும், ஆன்டியும் கனடாவில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துவிட்டு ஹாங்காங் திரும்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











