»   »  காதலியுடன் தெருவோரம் வசிக்கும் ஜாக்கி சான் மகள்: உதவி கேட்டு உருக்கமான வீடியோ வெளியீடு

காதலியுடன் தெருவோரம் வசிக்கும் ஜாக்கி சான் மகள்: உதவி கேட்டு உருக்கமான வீடியோ வெளியீடு

By Siva
Subscribe to Oneindia Tamil
காதலியுடன் ஜாக்கி சான் மகள் - வீடியோ

ஹாங்காங்: நடிகர் ஜாக்கி சானின் மகள் இருக்க இடம் இல்லாமல் சாலையோரம் படுத்து தூங்குவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜாக்கி சான் 1998ம் ஆண்டு மிஸ் ஆசியா அழகிப் பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அதன் காரணமாக எட்டா சோக் லாம்(18) என்ற மகள் பிறந்தார்.

தனது கள்ளத்தொடர்பை ஜாக்கி சான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். எட்டா தனது தாயுடன் வசித்து வந்தார்.

மாயம்

மாயம்

எட்டாவை காணவில்லை என்று அவரது தாய் எலைன் கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் எட்டா, தனது காதலியுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

பணம்

பணம்

நானும், என் காதலி ஆன்டி ஆட்டமும் கையில் பணம் இல்லாமல், இருக்க இடம் இல்லாமல் ஹாங்காங்கில் கஷ்டப்படுகிறோம். பாலத்திற்கு அடியில் எல்லாம் தூங்க வேண்டி உள்ளது. யாருமே உதவி செய்யவில்லை என்று எட்டா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

எட்டா

எட்டா

தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுத்து உதவி செய்யுங்கள். அரசு நடத்தும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்றால் என்னையும், ஆன்டியையும் பிரித்துவிடுவார்கள். ஃபேஸ்புக் நண்பர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. நான் போன் செய்தால் யாருமே எடுப்பது இல்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார் எட்டா.

பிரிவு

யாருமே உதவி செய்யாததால் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். ஏனென்றால் இதற்கு மேல் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. உண்மையாக காதலிக்கும் இருவரை பிரிக்க பார்க்கிறார்கள். எதற்காக என்று புரியவில்லை என்று கூறியுள்ளார் எட்டா. எட்டாவும், ஆன்டியும் 15 மாதங்களாக காதலித்து வருகிறார்கள்.

வேலை

வேலை

எட்டா ஆசிரியையான ஆன்டி மீது காதல் வயப்பட்டு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இது குறித்து தாய் எலைன் கூறியதாவது, ஆன்டிக்கு 30 வயது ஆகிறது. அவர் ஒரு ஆசிரியை. அவர் எப்படி ஒரு 18 வயது சிறுமியை இப்படி வீடியோ வெளியிடச் சொல்லலாம்?. இது தவறு. பணம் இல்லை என்றால் அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு எட்டாவின் தந்தையின் பெயரை இழுத்து பணம் கேட்கக் கூடாது. உலகம் முழுவதும் மக்கள் கடினமாக உழைக்கிறார்கள். பணத்திற்காக அடுத்தவர்களின் புகழை பயன்படுத்துவது இல்லை என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actor Jackie Chan's estranged daughter Etta has released a video on YouTube saying that she and her former teacher girl friend Andy are struggling without money and sleeping under bridges in Hong Kong.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more