twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புரூஸ்லீ அடித்தார் நான் மயங்கி விழுந்தேன்... ஆனா வலிக்கவே இல்லை - ஜாக்கி சான்

    |

    சென்னை: என்டர் தி டிராகன் படத்தில் ஒரு காட்சியில் நடித்த போது புரூஸ் லீ என்னை தாக்கினார். நான் மயங்கி விழுந்தேன். தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார். அவர் அடித்தது வலிக்கவேயில்லை என்று ஜாக்கிசான் கூறியுள்ளார். புரூஸ் லீ என்னை பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் வலிப்பது போல அன்று முழுவதும் நடித்தேன் என்றும் தனது அனுபவங்களை கூறியுள்ளார் ஜாக்கிசான்.

    புரூஸ் லீயின் மகள் ஷனோன் லீ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஜாக்கி சான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். என்டர் தி டிராகன் படத்தில் ஜாக்கி சான் ஒரு அடியாள் கும்பலில் ஒருவராக ஒரு காட்சியில் நடித்திருந்தார். அப்போது நிகழ்த்த மறக்க முடியாத நிகழ்வு ஒன்றை குறித்து ஜாக்கி சான் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Jackie Chan Speech about Bruce Lee.. viral on social media

    புரூஸ் லீ என்ற பெயரை நாம் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் நிச்சயம் கடந்து வந்திருப்போம். அவர் ஒரு இரும்பு மனிதர். அவரிடம் சண்டையிட்டு யாராலும் வெல்ல முடியாது. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும், அவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. மார்ஷியல் ஆர்ட்ஸ் குங்ஃபூ என்றாலே புரூஸ் லீ தான்.

    அவர் குழந்தையாக இருக்கும் போதே திரைப்படங்களில் நடித்தவர். 18 வயதிற்கு முன்னரே 20 படங்களுக்கு மேல் நடித்தவர். தற்காப்பு கலை என்பதின் முக்கியத்துவதை அனைவருக்கும் உணர்த்தியவர் புரூஸ் லீ. அவர் இறந்து 45 ஆண்டுகள் ஆன பிறகும் அனைவர் மனத்திலும் நீங்காத ஒரு தனி இடத்தை பிடித்தவர்.

    1973ஆம் ஆண்டு உலகெங்கிலும் வெளியாகி வெற்றி நடை போட்ட புரூஸ் லீ நடிப்பில் வெளியான படம் தான் என்டர் தி டிராகன் திரைப்படம். இப்படத்தில் ஜாக்கி சான் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

    அந்த படத்தில் புரூஸ் லீ உடன் நடித்த அனுபவத்தை பற்றி ஜாக்கி சான் மனம் திறந்து பேசியுள்ளார். அந்த வீடியோ ஒன்றினை புரூஸ் லீயின் மகளான ஷனோன் லீ தனது தந்தை புரூஸ் லீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஜாக்கி சான் ஒரு அடியாள் கும்பலில் ஒருவராக என்டர் தி டிராகன் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். அந்த அடியாள் கும்பலை புரூஸ் லீ தாக்குவது போல ஒரு காட்சியமைப்பு. ஜாக்கி சான் பின்னால் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

    அப்போது நிகழ்த்த மறக்க முடியாத நிகழ்வு ஒன்றை குறித்து ஜாக்கி சான் கூறுகையில், நான் என் முன்னே நிற்கும் புரூஸ் லீயை தாக்க ஓடினேன். அப்போது அவர் ஒரு குச்சியால் என்னை தாக்கினர். திடீரென என் கண்கள் இருட்டிப்போக நான் அப்படியே புரூஸ் லீயை பார்த்து கொண்டே மயங்கி விழுந்துவிட்டேன்.

    ஆனால் புரூஸ் லீயோ டைரக்டர் கட் சொல்லும் வரை, தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தார். ஷாட் கட் செய்த பிறகு என்னிடம் ஓடி வந்து, என் தலையை தூக்கி விட்டு அடித்ததற்காக மன்னிப்பு கேட்டார். நான் அவருடைய மிக பெரிய ரசிகன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னை புரூஸ் லீ அடித்தது வலிக்கவே இல்லை.

    அப்போது நான் இளமையாகவும் வலிமையாகவும் இருந்ததால் எனக்கு வலியே தெரியவில்லை. இருப்பினும் புரூஸ் லீ என்னை பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் வலிப்பது போல அன்று முழுவதும் நடித்தேன், என்று ஜாக்கி சான் கூறியது, அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை தான் புரூஸ் லீயின் மகள் தந்தையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த நிகழ்வு மூலம் ஜாக்கி சான் எவ்வளவு மரியாதையும், மதிப்பும், அன்பும் புரூஸ் லீ மேல் வைத்திருந்தார் என்பது தெரிகிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் புரூஸ் லீ இறந்து மூன்று நாட்கள் கழித்து அதாவது, 1973ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி தான் என்டர் தி டிராகன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Shannon Lee, daughter of Bruce Lee, posted a video of actor Jackie Chan talking on her Instagram page. Jackie Chan played a scene in the movie 'Enter the Dragon' as one of a slave gang. Jackie Chan was referring to an unforgettable event. The video is currently going viral on social networks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X