20 வயது ஜாக்கி சான் ரெடி.. இது டீ-ஏஜிங் இல்லை.. அதையும் தாண்டி அதிசயமானது.. நிஜமாவே லெஜண்ட் தான்!
ஹாங்காங்: 'தி மித்' படத்தில் போர் வீரனாக ஜாக்கி சானை ரசிகர்கள் பார்த்து ரசித்திருப்பார்கள். அதை விட இளமையான போர் வீரனாக தற்போது 'A Legend' படத்துக்காக ஜாக்கி சான் ஒரு புது ஐட்டத்தையே இறக்கியிருக்கிறார். உலகிலேயே ஜாக்கி சான் போல ஆக்ஷன் காட்சிகளை ரசிக்க வைத்த நடிகர் வேறு யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
படம் முழுக்க 12 ஃபைட் வந்தாலும் அதை பார்க்கத்தான் ரசிகர்கள் படையெடுத்து செல்வார்கள். 2005ம் ஆண்டு வெளியான The Myth படத்தின் 2ம் பாகத்தை எடுக்க ஆரம்பித்துள்ளார் ஜாக்கி சான். இந்த படத்துக்காக வயதான ஜாக்கி சான் உடன் யங் ஏஜ் ஜாக்கி சான் ஒருவரும் நடிக்கிறார்.

ஆனால், இது சமீபத்தில் தமிழ் சினிமாவில் செய்வது போல டீ-ஏஜிங் டெக்னாலஜி இல்லை என்றும் அதை விட பெரிய விஷயத்தை தனது அடுத்த படத்துக்காக ஜாக்கி சான் செய்திருக்கிறார் என ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர்.
20 வயது ஜாக்கி சான்: இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான் நடித்து வரும் 'எ லெஜண்ட்' திரைப்படம் ஜாக்கி சான், மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து நடித்த 'தி மித்' படத்தின் 2ம் பாகமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக தன்னை போலவே 20 வயது இளம் ஜாக்கி சானை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் குங்ஃபூ மாஸ்டர் ஜாக்கி சான்.
மித் கதை: இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான், கிம் ஹி சூன், மல்லிகா ஷெராவத் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் தான் தி மித். ஆராய்ச்சியாளரான ஜாக்கி சான் கனவில் அடிக்கடி வரும் ஒரு உருவத்தை இந்தியாவில் ஒரு இடத்தில் ஆராய்ச்சி செய்யும் போது அவர் ஒரு ஓவியமாக பார்க்க நேரிடுகிறார். அந்த ஓவியத்தை ஆராய்ச்சி செய்யும் போது அவரது பூர்வ ஜென்மத்தில் போர் வீரனாக இருந்து தனது அரசருக்காக ஒரு இளவரசியை கவர்ந்து வரும் போது அந்த இளவரசியுடன் காதல் வயப்பட்டு அவரை ஒரு இடத்தில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத வண்ணம் பார்த்துக் கொள்ள வைக்கிறார். போரில் போர் வீரன் ஜாக்கி சான் உயிரிழக்க அடுத்த ஜென்மம் எடுத்து வந்த ஆராய்ச்சியாளர் ஜாக்கி சான் மீண்டும் அதே இளவரசியை சந்திக்கும் கதை தான் இந்த தி மித் திரைப்படம்.

ஏஐ டெக்னாலஜியின் அசுர வளர்ச்சி: இதற்காக ஜாக்கி சான் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை நாடாமல் இந்த முறை ஏஐ தொழில்நுட்பத்தை நாடியிருக்கிறார். எம்ஜிஆர் போல, ரஜினிகாந்த் போல சில காட்சிகள் ஏஐ மூலம் தற்போது வெளியாகி வந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதை போல இந்த படத்தில் இளம் வயது ஜாக்கி சானாகவே ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி வருவதாக ஏஐ ஜாக்கி சானுடன் இணைந்து 70 வயது ஜாக்கி சான் பேசிய வீடியோ உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
வயசே ஆகல: சமீபத்தில் ஜாக்கி சானின் வயதான தோற்றம் ரசிகர்களை ஷாக்காக்கிய நிலையில், கண்ணுங்களா அது என் அடுத்த படத்துக்கான கெட்டப். உண்மையாகவே எனக்கு வயசு ஆகல. இப்பவும் நான் யங்காகத்தான் இருக்கேன் என சமீபத்தில் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் போது ஜாக்கி சான் போட்ட பதிவு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், தற்போது ஏஐ ஜாக்கி சானை திரையில் காட்ட காத்திருக்கிறார். இன்னும் ஏஐ டெக்னாலஜி சினிமாவிலும் நிஜ உலகிலும் என்னவெல்லாம் சித்து வேலை செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











