twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியலில் குதிக்கும் அதிரடி சூப்பர்ஸ்டார் ஜாக்கி சான்.. எந்தக் கட்சியில் சேரப் போறாரு தெரியுமா?

    |

    பெய்ஜிங்: நம்ம ஊரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலே வேண்டாம் என எந்திரன் ரஜினி போல டாட் வைத்து விட்டார்.

    ஆனால், ஆசியாவின் அதிரடி சூப்பர்ஸ்டாரான ஜாக்கி சான் திடீரென தான் அரசியலில் குதிக்கப் போகிறேன் என விடுத்துள்ள அறிவிப்பு உலக ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஹாங்காங்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனாவுக்கு ஆதரவாக அரசியலில் ஜாக்கி சான் இறங்க உள்ளாராம்.

    மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது.. சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாகம்மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது.. சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாகம்

    அதிரடி சூப்பர்ஸ்டார்

    அதிரடி சூப்பர்ஸ்டார்

    பிராஜெக்ட் ஏ, ஆர்மர் ஆஃப் தி காட், வூ ஆம் ஐ, குங்ஃபூ யோகா என ஏகப்பட்ட அதிரடி படங்களில் நடித்து உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் ஜாக்கி சான். சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த ஜாக்கி சான் அரசியலில் இணைய ஆர்வம் காட்டி உள்ளார்.

    67 வயது

    67 வயது

    நடிகர் ஜாக்கி சானுக்கு தற்போது 67 வயதாகிறது. பறந்து பறந்து ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் சண்டைப் போட்டு சர்வதேச ரசிகர்களை கண் இமைக்காமல் பார்க்க வைத்த நடிகர் ஜாக்கி சான் திடீரென அரசியலில் இணையப் போகிறார் என்பது பலருக்கும் ஆச்சர்யமாகவும் ஹாங்காங் மக்களுக்கு வருத்தமாகவும் உள்ளது.

    எந்த கட்சி

    எந்த கட்சி

    சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாக நடிகர் ஜாக்கி சான் அறிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதை சீனாவில் பெரும் கோலாகலமாக அந்த கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது தான் நடிகர் ஜாக்கி சான் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    தாய் வீடு

    தாய் வீடு

    ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த நடிகர் ஜாக்கி சான் ஹாங்காங்கும் சீனாவும் தன் தாய் வீடு என்றும், சீனாவின் வளர்ச்சி உலக அரங்கில் மிகப்பெரிய இடத்தில் இருப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் நாட்டை மேம்படுத்தி உள்ளதாகவும் பாராட்டி உள்ளார்.

    மக்கள் எதிர்ப்பு

    மக்கள் எதிர்ப்பு

    ஹாங்காங்கில் சீனாவின் அராஜகத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜாக்கி சான் இப்படியொரு நிலைபாட்டை எடுத்திருப்பதற்கு ஏகப்பட்ட ஹாங்காங் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சீன மக்கள் ஜாக்கி சானின் இந்த முடிவை ஆதரித்து வருகின்றனர்.

    அரசியல் ஆசை

    அரசியல் ஆசை

    நம்ம ஊரில் மட்டுமின்றி உலகளவிலும் நடிகர்களுக்கு அரசியல் ஆசை விடாது போல, நன்றாக நடித்து மக்கள் செல்வாக்கை பெற்றுக் கொண்டு அரசியலில் களம் கண்டு வெற்றிக் காண பலரும் துடித்து வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, வில் ஸ்மித் என ஏகப்பட்ட நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    Asia’s action Super Star Jackie Chan wish to join Communist Party of China. He also praised the Communist Party of China’s recent developments.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X