முதன்முறையாக பாட்டு பாடிய ஜாக்கி சான் - தமிழ், ஆங்கிலத்தில் போலீஸ் ஸ்டோரி 2013
முதல் முறையாக ஜாக்கி சான் ஒரு படத்தில் பாட்டுப் பாடியுள்ளார். படத்தின் பெயர் போலீஸ் ஸ்டோரி 2013.
உலக பிரபல ஹீரோக்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளை மிகவும் கவர்ந்த நாயகனாக திகழ்பவர் ஜாக்கி சான்.

போலீஸ் ஸ்டோரி
ஜாக்கி சான் நடித்த படங்களில் மிகப் பிரபலமானது போலீஸ் ஸ்டோரி. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெளியிட்டு வெற்றி பெற்றார் ஜாக்கி சான்.

புதிய பாகம்
போலீஸ் ஸ்டோரியின் அடுத்த பாகம் இப்பொழுது "போலீஸ் ஸ்டோரி 2013" என்ற தலைப்பில் வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் உலகம் முழுக்க இம்மாத இறுதியில் வெளியாகிறது.

தமிழிலும்
தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வெளியீடாக வருகிறது இந்தப் படம். தமிழகமெங்கும் 200-க்கும் அதிகமான திரை அரங்குகளில் வெளியாகிறது.

ஜாக்கியின் பாட்டு
மேலும் இப்படத்தின் சிறப்பு அம்சமாக முதன்முறையாக ஜாக்கிசான் ஒரு பாடலை பாடியுள்ளார். யு - டியூபில் படு பாப்புலராக உள்ளது இந்தப் பாடல்.

3 டியில்
இப்படத்தை தமிழ் நாட்டில் சுரபி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் வெளியிடுகிறார். ‘தளபதி' ‘முத்து' ‘வில்லு' ‘குருவி' ‘ ராம்போ - 3' போன்ற 250-க்கும் மேற்ப்பட்ட ஆங்கிலம், தமிழ் படங்களை என்.எஸ்.சி ஏரியாவில் 32வருடமாக விநியோகம் செய்துள்ள இவர் இப்படத்தை 3D-யில் வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











