கொட்டாப்பாக்கும்.. கொழுந்து வெத்தலையும்.. குஷ்பு மகள் திருமணத்தில் ஜாக்கி ஷெராஃப் செம சேட்டை!
சென்னை: இந்திய திரையுலகில் பிரபலமான பல ஜாம்பவான்கள் நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துக் கொள்வதற்காக கோவா சென்றிருந்தனர். நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர். சியின் மூத்த மகள் அவந்திகா தனுஷ் மருமகன் உடன் அட்டாக்கர் படத்தில் நடித்து வரும் நிலையில், அவசர அவசரமாக திருமணத்தையும் முடித்துள்ளார்.
எளிமையான முறையில் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என அவந்திகா கூறிய நிலையில், நம்ம வீட்டில் நடக்கும் முதல் பெரிய விசேஷம் சும்மா கிராண்டா நடக்கணும் என ட்ரீம் வெட்டிங்கை பிளான் செய்து கோவாவில் நடத்தி முடித்தார் குஷ்பு.

சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மறைந்த கே. பாக்கியராஜ், ஜாக்கி ஷெராஃப், த்ரிஷா, தமன்னா, ஆர்த்தி ரவி என ஏகப்பட்ட பிரபலங்கள் குஷ்பு மகள் திருமணத்தில் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மல்லிக்கைப்பூவை மேலே போட்டுக் கொண்டு ஜெயிலர் படத்தில் நடித்த பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் திருமணத்தில் செய்த சேட்டை வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மகள் திருமணமும் விமர்சனமும்: நடிகை குஷ்பு மகள் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், அந்த திருமணத்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய கே. பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவுக்கு பல நடிகர்கள், நடிகைகள் கலந்துக் கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இதற்கிடையே மகளின் திருமண புகைப்படங்களை குஷ்பு பதிவிட்டதை சிலர் ட்ரோல் செய்ய அதற்கு குஷ்பு கொடுத்த பதிலடி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த ஆண்டு வெளியான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் போல சூழல் மாறிவிட்டது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஜாக்கி ஷெராஃப் செம சேட்டை: கோவாவில் நடைபெற்ற திருமணத்துக்கு பட்டு வேட்டிச் சட்டைக் கட்டிக் கொண்டு ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் கலந்துக் கொண்டார். மல்லிகைப்பூவை கழுத்திலும் கையிலும் சுற்றிக் கொண்டு மைனர் மாப்பிள்ளை போல அவர் திரிந்த காட்சிகள் வைரலாகி வந்த நிலையில், திருமண விருந்தை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, கடைசியாக வெத்தலைகளை அடுக்கி சுண்ணாம்பு தடவி அப்படியே பீடா ஸ்டைலில் வாயில் போட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. குஷ்பு மகள் திருமணத்தில் இவர் தான் செம குஷியில் இருந்தார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications