அதர்வா நடிக்கும் ‘கணிதன்’- வில்லன் ஜாக்கி ஷெராப்

சென்னை: பிரபல இந்தி நடிகரான ஜாக்கி ஷெராப் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் இதற்கு முன்னர் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இம்மாதம் வெளியாகவுள்ள சூப்பர்ஸ்டாரின் கோச்சடையானில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அதர்வா நடிப்பில் தயாராகும் கணிதன் படத்தில் நடிக்க இருக்கிறாராம் ஜாக்கி ஷெராப். அதுவும் வில்லன் கதாபாத்திரமாம்.

நாயகன் அதர்வா....

நாயகன் அதர்வா....

வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் டி.என்.சந்தோஷ் டைரக்ட் செய்யும் படம் ‘கணிதன்'. இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கேத்ரின் டிரேசா நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து விட்டது

இது தான் கதைக்களம்....

இது தான் கதைக்களம்....

கணிதன் என்றால் கணக்கு பார்ப்பவன். வீரத்துடன் இருக்கிறவனை வீரன் என்று அழைக்கிற மாதிரி கணக்கு பண்ணி வாழ்கிறவனை கணிதன் என்று அழைக்கிறார்களாம். அதர்வா எதையும் திட்டமிட்டு கணக்கா செய்கிறவர். அவரது கணக்கும் ஒரு இடத்தில் தப்பாகிறது. பிறகு அதனை எப்படி சரி செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம்.

3வது தமிழ்ப்படம்...

3வது தமிழ்ப்படம்...

கே.பாக்யராஜ், நரேன், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தில் தற்போது ஜாக்கி ஷெராப்பும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜாக்கியின் மூன்றாவது தமிழ்ப் படமாம்.

வித்தியாசமான படம்...

வித்தியாசமான படம்...

வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படப்போகிற இந்த ஆக்‌ஷன் கதையில் ஜாக்கி வில்லனாக வந்து அசத்தப் போகிறாராம். ஏற்கனவே ஆரண்யகாண்டம் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் ஜாக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X