பேருக்குதான் பாலிவுட் வில்லன்... ஜெயிலர் படத்தில் சம்பளமே இவ்வளவு தானா..? அட பாவமே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் லைகா தயாரிப்பில் ரஜினியின் தலைவர் 170 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் 2024ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜெயிலர் படத்தில் கமிட்டாகியுள்ள பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் சம்பளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

 தலைவர் 170 அப்டேட்

தலைவர் 170 அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 170 படத்தின் அப்டேட் இன்று காலை வெளியானது. லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 பிரம்மாண்டமான கூட்டணி

பிரம்மாண்டமான கூட்டணி

ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மலையாள ரசிகர்களுக்காக மோகன் லால், கன்னட ரசிகர்களுக்கு சிவராஜ்குமார், பாலிவுட்டில் இருந்து ஜாக்கி ஷெராஃப் என வெரைட்டியான கூட்டணியில் உருவாகி வருகிறது ஜெயிலர். மிகப் பிரம்மாண்டமான நட்சத்திரக் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 ஜாக்கி ஷெராஃப் சம்பளம்

ஜாக்கி ஷெராஃப் சம்பளம்

கடந்த சில தினங்களாக ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்திற்காக ரஜினிக்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் மெயின் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராஃப்பின் சம்பளம் பற்றியும் தகவல் கிடைத்துள்ளது. பிகில் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் ஜாக்கி ஷெராஃப். அதன் பின்னர் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாகியுள்ளார்.

 பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடிக்க ஜாக்கி ஷெராஃப்க்கு 4 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் பல கோடிகள் வாங்கி குவிக்கும் ஜாக்கி ஷெராஃப், ஜெயிலரில் குறைந்த சம்பளம் மட்டுமே வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஜாக்கி ஷெராஃப்பின் சம்பள விவரம் பாலிவுட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதேபோல், மோகன்லால், சிவராஜ்குமார் இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளதால், அவர்களுக்கும் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஜெயிலர் ரிலீஸ் தேதி

ஜெயிலர் ரிலீஸ் தேதி

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் இந்தியன் 2 திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் ரஜினி - கமல் இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ரஜினியின் சந்திரமுகியும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரேநாளில் ரிலீஸாகியிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X